உடுமலை மாரியம்மன் கோவிலில் புதிய தேர் வெள்ளோட்டம் - திரளான பக்தர்கள் பங்கேற்பு

உடுமலையில் உள்ள புகழ்பெற்ற மாரியம்மன் கோவிலின் புதிய தேர் வெள்ளோட்டம் சிறப்பு பூஜைகள், பாரம்பரிய வாத்தியங்கள் முழங்க இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.


திருப்பூர்: உடுமலையில் உள்ள புகழ்பெற்ற மாரியம்மன் கோவிலின் புதிய தேர் வெள்ளோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள புகழ்பெற்ற மாரியம்மன் கோவில் தேர் திருவிழா, ஆண்டுதோறும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.



இந்த நிலையில் சுமார் 100 ஆண்டுகளாகப் பயன்பாட்டிலிருந்து வந்த பழமையான தேருக்குப் பதிலாக ரூ.53 லட்சம் மதிப்பில் புதிய தேர் வடிவமைக்கப்பட்டுள்ள முக்கோண வடிவில் மர சிற்ப வேலைப்பாடுகளுடன் ஐந்து நிலைகளைக் கொண்டதாக உருவாக்கப்பட்ட இந்த தேர் மொத்த உயரம் 12 அடி உடையதாகும்.

இந்தத் தேரில் அம்மன் தலங்கள் குறித்த வரலாற்றுச் சிற்பங்கள், சிவன், விஷ்ணு முருகன், விநாயகர் உள்ளிட்ட 220 மர சிற்பங்களும், 120 பொதிஇயல் சிற்பங்களும் இடம் பெற்றுள்ளன.

இந்நிலையில் கண்ணைக் கவரும் சிற்ப வேலைப்பாடுகளுடன் அற்புதமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த புதிய தேரை கண்டு ரசிப்பதற்குப் பொதுமக்கள் ஆர்வமாக இருந்த நிலையில், இன்று புதிய தேர் வெள்ளோட்டம் சிறப்புப் பூஜைகள், பாரம்பரிய வாத்தியங்கள் முழங்க வெகு சிறப்பாக நடைபெற்றது.



மாரியம்மன் கோவிலிலிருந்து துவங்கி தளிரோடுகுட்டை திடல், சதாசிவம் வீதி, தங்கம்மாள் ஓடை, கொல்லம் பட்டறை பொள்ளாச்சி சாலை வழியாக மீண்டும் மாரியம்மன் கோவில் பகுதியில் நிலை நிறுத்தப்பட்டது.



புதிய தேர் வெள்ளோட்டம் நிகழ்வினை சுமார் 2000-க்கும் அதிகமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கிடையில் வருகின்ற மார்ச் மாதம் 28ஆம் தேதி நோன்பு சாட்டுதலுடன் தொடங்கி உச்ச நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் ஏப்ரல் மாதம் 13ஆம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

உடுமலையில் மாரியம்மன் கோவில் புதிய தேர் வெள்ளோட்டம் நிகழ்விற்குக் காவல் துணை கண்காணிப்பாளர் கோபாலகிருஷணன் தலைமையில் 150க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...