உடுமலை கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியர் பணி - விண்ணப்பங்கள் வரவேற்பு

உடுமலை கேந்திரிய வித்யாலயா பள்ளியில் காலியாக உள்ள ஆரம்பக் கல்வி ஆசிரியர் (பிரைமரி ஆசிரியர்), இசை மற்றும் நடன பயிற்சியாளர், விளையாட்டு பயிற்சியாளர், சிறப்பாசிரியர் ஆகிய பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியீடு.



திருப்பூர்: உடுமலை கேந்திரிய வித்யாலயா பள்ளியில் காலியாக ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை கேந்திரியா வித்யாலயா பள்ளியின் முதல்வர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, கேந்திரியா வித்யாலயா பள்ளியில் ஆரம்பக் கல்வி ஆசிரியர் (பிரைமரி ஆசிரியர்), இசை மற்றும் நடன பயிற்சியாளர், விளையாட்டு பயிற்சியாளர், சிறப்பாசிரியர் ஆகிய பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருப்பமுள்ளவர்கள் மார்ச் 3ஆம் தேதி காலை 9 மணிக்கு நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளலாம்.

அதேபோல், சமஸ்கிருதம், கணிதம், அறிவியல் பட்டதாரி ஆசிரியர் மற்றும் கணினி பயிற்சியாளர் பணிக்கு மார்ச் 4ஆம் தேதி நேர்முகத் தேர்வு நடைபெறுகிறது.

விண்ணப்பங்களை udumalpet.kvs.ac.in என்ற வலைதள முகவரியில் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு எனக் கூறியுள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...