தாராபுரம் அலங்கியம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.8.5 லட்சத்திற்கு மக்காச்சோளம் ஏலம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகிலுள்ள அலங்கியம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நடைபெற்ற மறைமுக ஏலத்தில் அதிகபட்சமாக குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,155-ம் குறைந்தபட்சமாக ரூ.2,146 -ம் ஏலம் போனது.


திருப்பூர்: தாராபுரத்தை அடுத்த அலங்கியத்தில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் அமைக்கப்பட்டுள்ளது. அலங்கியம் பகுதியில் அறுவடை செய்யப்பட்ட மக்காச்சோளத்தை விவசாயிகள் விற்பனை இந்தக் கூடத்திற்கு விற்பனைக்கு கொண்டு வந்தனர்.



குறிப்பாக திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் சுமார் 40 ஆயிரம் கிலோ மக்காச்சோளத்தை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.



அதற்கான மறைமுக ஏலம் நேற்று நடைபெற்றது. ஏலத்தில் திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் கலந்து கொண்டனர். அப்போது அதிக பட்சமாக குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,155-ம் குறைந்த பட்சமாக ரூ.2,146 -ம் ஏலம் போனது.

அதன் மூலம் மொத்தமாக ரூ.8 லட்சத்து 56 ஆயிரத்து 898-க்கு மக்காச்சோளம் விற்பனையானது. மக்காச் சோளம் ஏலத்திற்கான ஏற்பாடுகளை ஒழுங்கு முறை கூடம் மேற்பார்வையாளர் அருள்குமார் செய்து இருந்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...