நீலகிரியில் வனவிலங்குகளை வேட்டையாடிய வடமாநில கும்பல் கைது - புலித்தோல் பறிமுதல்

நீலகிரி மாவட்டம் அவலாஞ்சி பகுதியில் கம்பளி விற்பனை செய்வதாகக் கூறி வனப்பகுதியில் சிறுத்தை மற்றும் புலியை வேட்டையாடிய வட மாநில பவாரிய கும்பலை வனத்துறையினர் கைது செய்து, புலி தோலை பறிமுதல் செய்தனர்.


நீலகிரி: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள அரசூர் கிராமத்தில் வெளி மாநிலத்தை சேர்ந்த சிலர் சந்தேகப்படும்படி நடமாட்டம் இருந்ததால், சத்தியமங்கலம் வனத்துறையினர் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது, அவர்கள் புலித்தோல், புலிநகம், புலி எலும்புகள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.



தொடர் விசாரணையில் பஞ்சாப்பை சேர்ந்த ரத்னா (வயது40), மங்கல் (வயது28), கிருஷ்ணன் (வயது59), ராஜஸ்தானை சேர்ந்த ராம் சந்தர் (வயது50) எனத் தெரிய வந்ததை அடுத்து அவர்களை கைதுசெய்து புலி தோல் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.



விசாரணையில், நீலகிரி மாவட்டம் அவலாஞ்சி அருகே அடர்ந்த வனப்பகுதியில் வட மாநிலத்தை சார்ந்த பவாரியா ஆதிவாசி கும்பல் கூடாரம் அமைத்து தாங்கி, டிராப் எனப்படும் சுறுக்கை வைத்து சிறுத்தை மற்றும் புலியை பிடித்ததாகவும், பின்னர் அவற்றை அடித்துக் கொன்று இறைச்சியை சமைத்து சாப்பிட்டதுடன் தோலை கடத்தியதும் உறுதிப்படுத்தப்பட்டது.

இதனையடுத்து நீலகிரி மாவட்ட வன அலுவலர் கவுதம், உதவி வன பாதுகாவலர் சரவணன் மற்றும் சத்தியமங்கலம் வனத்துறை அதிகாரிகள், பிடிபட்ட நான்கு பேரையும் புலியை கொன்ற இடத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.



அதன்பேரில் தற்போது 2 வடமாநில பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே, 4 பவாரியா கும்பல்கள் நீலகிரி, கோவை, ஈரோடு மாவட்டங்களில் நுழைந்துள்ளதாகவும் அதில் ஒரு கும்பல் மட்டுமே சிக்கிய நிலையில் மேலும் 3 குழுக்கள் எங்கே உள்ளனர் என்பது குறித்து விசாரித்து, அவர்களைப் பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...