உடுமலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா - ஓ.பி.எஸ். அணியினர் கொண்டாட்டம்

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாளையொட்டி, திருப்பூர் மாவட்டம் உடுமலையில் அவரது உருவப்படத்திற்கு ஓ.பி.எஸ் அணியினர் மலர் மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை மத்திய பேருந்து நிலையம் முன்பு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75 ஆம் ஆண்டு பிறந்த நாளை ஒட்டி அலங்கரிக்கப்பட்ட திருவுருவப்படத்திற்கு ஓபிஸ் அணி உடுமலை நகர செயலாளர் சற்குணசாமி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில், திருப்பூர் புறநகர் மாவட்ட தலைவர் வெங்கடுபதி, மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி செயலாளர் லட்சுமணன் சாமி, குடிமங்கலம் மேற்கு ஒன்றிய செயலாளர் நாகராஜ், மடத்துக்குளம் பொதுக்குழு உறுப்பினர் மனோஜ், உடுமலை நகர பொருளாளர் நட்ராஜ், உடுமலை வடக்கு ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், ஜெ.என்.பாளையம் பொறுப்பாளர் சந்திரன், உடுமலை நகர கழக பிரதிநிதி உடுமலை நகர துணை செயலாளர் ஜாபர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...