'உடல் உறுப்புகளை தானம் செய்யுங்கள்..!' - கோவை ஏர்போர்ட்டில் மாணவர்கள் நாடகம்!

கங்கா மருத்துவமனை செவிலியர் கல்லூரி மாணவர்கள், கோவை விமான நிலைய வளாகத்தில் உடல் உறுப்பு தானம் மற்றும் தோல் உறுப்பு தானம் குறித்த நாடகம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.



கோவை: கோவை விமான நிலையத்தில் தனியார் செவிலியர் கல்லூரி மாணவர்கள் உடல் உறுப்பு தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.



கோவை வட்டமலை பாளையம் பகுதியில் உள்ள கங்கா மருத்துவமனை செவிலியர் கல்லூரியில் ஏராளமான மாணவ மாணவியர் பயின்று வருகின்றனர். இந்த கல்லூரியின் முதலாம் ஆண்டு மாணவர்கள் 25-க்கும் மேற்பட்டோர், கோவை விமான நிலைய வளாகத்தில் உடல் உறுப்பு தானம் மற்றும் தோல் உறுப்பு தானம் குறித்த நாடகம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.



இந்த நாடகம் விமான நிலைய பயணிகளிடம் வரவேற்பைப் பெற்றது.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட மாணவர்கள் கூறுகையில், கோவை மாநகரம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் முகபாவனை நாடகம் நடத்தி வருகிறோம். பொதுமக்கள் இருசக்கர வாகனம் ஓட்டும்போது ஹெல்மெட் அணிய வேண்டும், தோல் உறுப்பு தானம் செய்ய வேண்டும், கார் ஓட்டும்போது சீட் பெல்ட் அணிய வேண்டும். மது அருந்திவிட்டு வாகனத்தை இயக்கக் கூடாது என்று வேண்டுகோள் விடுத்தனற்.



நிகழ்ச்சியின் முடிவில் கோவை விமான நிலைய இயக்குநர் செந்தில்வளவன், கல்லூரி மாணவர்களை பாராட்டினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...