கிணத்துக்கடவு சமுதாயக் கூடத்தில் சமுதாய வளைகாப்பு - எம்எல்ஏ தாமோதரன் பங்கேற்பு

கிணத்துக்கடவு சமுதாயக் கூடத்தில் சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப்பணிகள் திட்டம் சார்பில் கர்ப்பிணிப் பெண்களுக்குச் சமுதாய வளைகாப்பு நடத்தப்பட்டது. இதில் கர்ப்பிணி பெண்களுக்கு புடவை வழங்கி, வளையல் அணிவிக்கப்பட்டது.


கோவை: கிணத்துக்கடவு சமுதாயக் கூடத்தில், கர்ப்பிணிப் பெண்களுக்குச் சமுதாய வளைகாப்பு நடத்தப்பட்டது.



கோவை கிணத்துக்கடவு சமுதாயக் கூடத்தில் சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப்பணிகள் திட்டம் சார்பில் கர்ப்பிணிப் பெண்களுக்குச் சமுதாய வளைகாப்பு நடத்தப்பட்டது.

இதில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கிணத்துக்கடவு வட்டார திட்ட அலுவலர் சகுந்தலா அனைவரையும் வரவேற்றுப் பேசினார். முன்னதாக சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியை கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் தாமோதரன் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

பின்னர் கர்ப்பிணிப் பெண்களுக்குப் புடவை வழங்கி, வளையல்கள் அணிவித்து ஐந்து வகையான அறுசுவை சாப்பாடுகள் வழங்கப்பட்டன. தாய் வீட்டில் நடப்பது போல் நடந்த இந்த வளைகாப்பு நிகழ்ச்சியைக் கண்டு கர்ப்பிணி பெண்கள் நெகிழ்ச்சி அடைந்தனர்.



இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ராஜன், கிணத்துக்கடவு ஒன்றிய குழு உறுப்பினர் ராமசாமி, ஊராட்சி மன்ற தலைவர்கள் பிரபு, சுரேஷ் மற்றும் கிணத்துக்கடவு வட்டார மருத்துவ அலுவலர் சித்ரா, பேரூராட்சி கவுன்சிலர்கள் சக்தி சரண்யா, மஞ்சுளா மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்ட அலுவலர்கள் பணியாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...