கோவையில் ஹெல்மெட் அவசியத்தை உணர்த்த தன்னார்வல அமைப்புடன் கைகோர்த்த காவல்துறை

கோவை ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரியின் முன்பு சோதனை சாவடி அமைத்து உயிர் அறக்கட்டளை கூட்டமைப்புடன் இணைந்து போலீசார் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதில் ஹெல்மெட் அணியாமல் வந்தவர்கள் மீது 40 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.


கோவை: கோவையில் தன்னார்வல அமைப்புடன் போலீசார் இணைந்து தற்காலிக சோதனை சாவடி அமைத்து வாகன ஓட்டிகளை கண்காணித்தனர்.

கோயம்புத்தூர் நகரக் காவல் துறையினர், சாலை விபத்துகளைக் குறைக்கும் முயற்சியாகவும், பொதுமக்களிடையே சாலைப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதன் ஒருபகுதியாக கோவை நகரில் உள்ள பல்வேறு கல்லூரிகள் மற்றும் உயிர் அறக்கட்டளை என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்துடன் இணைந்து, நகரில் 100% ஹெல்மெட் அணிவதை ஊக்குவிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.



இது ஒரு புதிய முயற்சியாக இல்லாவிட்டாலும், அதன் நோக்கம் வாரத்திற்கு ஒருமுறை, போக்குவரத்து போலீசார், கல்லூரி மாணவர்கள் மற்றும் உயிர் அமைப்புடன் இணைந்து, அந்தந்த கல்லூரி முன்பு சோதனை சாவடி அமைத்து, வாகனங்கள் செல்வதைக் கண்காணிக்கின்றனர்.

இந்த சோதனையின் போது ஹெல்மெட் அணிவதை ஊக்குவிக்கும் வகையிலும், ஹெல்மெட் அணிவது குறித்து தன்னார்வலர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். மறுபுறம் காவல்துறையினர் ஹெல்மெட் அணியாமல் அத்துமீறி நுழைபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்கின்றனர்.

இந்நிலையில் இன்று ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரியின் முன்பு உயிர் கூட்டமைப்புடன் இணைந்து போலீசார் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதில் ஹெல்மெட் அணியாமல் வந்தவரக்ள மீது 40 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

மேலும் ஹெல்மெட் அணியாமல் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளை கண்காணிக்கும் பணியில் 15-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளனர். இதை தவிர குனியமுத்தூர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் சண்முகம் தலைமையிலான குழுவினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...