கோவையில் தடை செய்யப்பட்ட கேரள லாட்டரி சீட்டு விற்பனை - முதியவர் கைது!

கோவை ராமநாதபுரம் அருகே தடை செய்யப்பட்ட கேரள லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த பாப்பம்பட்டி பிரிவை சேர்ந்த கணேசன் (56) என்ற முதியவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 40 லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ.5,680 பணம் பறிமுதல் செய்துள்ளனர்.


கோவை: கோவை மாவட்டம் ராமநாதபுரம் அருகே தடை செய்யப்பட்ட கேரள லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த முதியவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தமிழ்நாட்டில் லாட்டரி சீட்டு விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சட்ட விரோதமாக கேரள லாட்டரிகளையும், மூன்றாம் நம்பர் லாட்டரிகளையும் கோவையில் சில சமூக விரோத கும்பல் விற்பனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் கோவை ராமநாதபுரம் பகுதியில் சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில், அப்பகுதியில் சோதனை நடத்திய போது, ராமநாதபுரம் அடுத்த பங்கஜம் மில் சாலையில் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டு வந்த முதியவர் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

இதனையடுத்து அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர், பாப்பம்பட்டி பிரிவை சேர்ந்தவர் கணேசன் (56) என்பதும் கேரளாவிலிருந்து வரவழைக்கப்படும் லாட்டரி சீட்டுகளை சட்டவிரோதமாக கோயம்புத்தூரில் விற்பனை செய்ததும் தெரியவந்தது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த ராமநாதபுரம் போலீசார் கணேசன் இடமிருந்து 40 லாட்டரி சீட்டுகளையும் 5,680 ரூபாய் பணத்தையும் பறிமுதல் செய்துள்ளனர். இதனிடையே சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட லாட்டரிகளை விற்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில், கோவையில் லாட்டரி புழக்கத்தை தடுக்க தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டை நடத்த வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...