கோவை விசைத்தறி சங்க தலைவர் பழனிச்சாமி உயிரிழப்பு - துக்கம் தாளாமல் அவரது மனைவியும் உயிரிழந்த சோகம்!

கோவை சோமனூரை சேர்ந்த விசைத்தறி சங்க தலைவர் பழனிசாமி, உடல் நலக்குறைவால் நேற்று நள்ளிரவு உயிரிழந்த நிலையில் இன்று காலை அவரது மனைவி உயிரிழந்த சம்பவம் அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவை மாவட்டம் சோமனூரில் விசைத்தறி சங்க தலைவர் பழனிசாமி இறந்த துக்கத்தில், அவரது மனைவியும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை சோமனூர் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி(74). விசைத்தறி சங்கத் தலைவரான இவர், விசைத்தறி தொழிலாளர்களுக்காக பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டுள்ளார். குறிப்பாக விசைத்தறி தொழிலாளர்களுக்கான இலவச மின்சாரம் உட்பட பலவற்றிற்கு பல்வேறு மாவட்டங்களில் போராட்டங்களை முன்னெடுத்தவர்.

இந்நிலையில் உடல்நல குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றி நள்ளிரவு உயிரிழந்தார்.

விசைத்தறி தொழிலாளர்களுக்காக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்த பழனிச்சாமியின் உயிரிழப்பு விசைத்தறி தொழிலாளர்கள் மத்தியிலும் விசைத்தறி சங்கங்கள் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதனிடையே கணவர் இறந்த சோகத்தில் இருந்த அவரது மனைவி கருப்பாத்தாள் இன்று காலை உயிரிழந்துள்ளார். கணவன் - மனைவி இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அவரது உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் பழனிச்சாமி மற்றும் அவரது மனைவி மறைவுக்கு விசைத்தறி தொழிலாளர்கள், விசைத்தறி சங்கங்கள், விவசாய சங்கத்தினர் உட்பட பல்வேறு அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...