'வால்பாறை வனப்பகுதியில் விடப்பட்ட மக்னா யானை நலமுடன் உள்ளது..!' - வனத்துறை அதிகாரிகள் தகவல்!

கோவை மதுக்கரை சுற்றுவட்டார பகுதிகளில் முகாமிட்டிருந்த மக்னா யானை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டு, வால்பாறை அருகேயுள்ள வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வரும் நிலையில், யானை நலமுடன் இருப்பதாக வனத்துறை அதிகாரிகள் தகவல்.



கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அருகேயுள்ள வனப்பகுதியில் விடுவிக்கப்பட்ட மக்னா யானை நலமுடன் இருப்பதாக வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



மதுக்கரை சுற்றுவட்டார பகுதிகளில் முகாமிட்டிருந்த மக்னா யானையை வனத்துறையினர், தொடர்ந்து கண்காணித்து வந்த நிலையில், கும்கி யானையின் உதவியுடன், மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.



இந்நிலையில், ரேடியோக்காலர் பொருத்தப்பட்டு, கோவையில் இருந்து லாரியின் மூலம் ஏற்றி வரப்பட்ட மக்னா யானை, வால்பாறை அடுத்த மானாம்பள்ளி வனச்சரகத்திற்கு உட்பட்ட மந்திரி மட்டம் அருகே வனப்பகுதியில் இரவு சுமார் 9 மணியளவில் விடுவிக்கப்பட்டது.



விடுவிக்கப்பட்டவுடன், தண்ணீர் தொட்டியில் இருந்த தண்ணீர் அருந்திய மக்னா யானை, பின்பு வனப்பகுதிக்குள் சென்றது.



இதனிடையே, இன்று காலை ஆற்றின் கரையோரத்தில் நின்றிருந்த மக்னா யானை, தண்ணீர் அருந்திவிட்டு நடந்து சென்ற நிலையில், வனத்துறை யானையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.



மயக்க மருந்து செலுத்தப்பட்ட நிலையில், 24 மணி நேரம் லாரியில் யானை நின்று கொண்டு வந்ததால், யானை மிகவும் சோர்வாக காணப்பட்டது என்றும், மயக்க மருந்தின் வீரியம் குறைந்த பின்பு யானை உற்சாகத்துடன் உள்ளதாகவும் யானையை கண்காணித்து வரும் வனத்துறையினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யானையை கண்காணிக்க வால்பாறை, மானாம்பள்ளி, பொள்ளாச்சி மற்றும் டாப்சிலிப் ஆகிய நான்கு வனச்சரகர்கள் தலைமையில் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், இந்த கண்காணிப்பு பணியில் கால்நடை மருத்துவர் சுகுமார் மற்றும் ஓய்வுபெற்ற மருத்துவர் மனோகரன் மற்றும் சத்தியமங்கலம் வனத்துறை மருத்துவர் சதாசிவம் ஆகியோர் வனப்பகுதியில் தங்கியிருந்து யானையை கண்காணித்து வருகின்றனர். தற்போது யானை நலமுடன் இருப்பதாக வனத்துறையினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...