தாராபுரம் அருகே மூலனூர் அரசு பள்ளியில் போதை தடுப்பு விழிப்புணர்வு முகாம்

தாராபுரம் அடுத்த மூலனூர் அரசு மேல்நிலை பள்ளியில், வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் நடத்தப்பட்ட போதை தடுப்பு விழிப்புணர்வு முகாமில், மாணவர்களுக்கு போதை பழக்கத்தால் ஏற்படும் தீங்குகள் குறித்து அறிவுரை வழங்கப்பட்டன.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே அரசு பள்ளியில் நடைபெற்ற போதை தடுப்பு விழிப்புணர்வு முகாமில் மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

தாராபுரம் அடுத்த மூலனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் போதை விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு தாராபுரம் வட்ட சட்டப்பணிகள் குழு தலைவரும் சார்பு நீதிபதியுமான தர்ம பிரபு தலைமை தாங்கினார்.



இந்த நிகழ்வில் தாராபுரம் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் கலைச்செழியன், செயலாளர் ராஜேந்திரன், வழக்கறிஞர் சித்ரா, மூலனூர் காவல்துறை ஆய்வாளர் நாச்சிமுத்து, மூலனூர் அரசு மருத்துவமனை மருத்துவர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



இந்த நிகழ்வில் மாணவ, மாணவிகளுக்கு போதை பழக்கத்தினால் ஏற்படும் விளைவுகளையும், அதனால் சமுதாயம் எவ்வாறு சீர்கெடுக்கிறது என்பதையும், போதை பழக்கத்திலிருந்து விடுபட விளையாட்டு, ஓவியம், புத்தகம் வாசிப்பது போன்ற பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால் கெட்ட பழக்கங்களில் இருந்து விடுபடலாம் என அறிவுரை வழங்கப்பட்டது. அப்போது, மாணவர்களின் சந்தேகங்களுக்கு உரிய விளக்கமும் அளிக்கப்பட்டது.

தாராபுரம் வட்ட சட்டப்பணிகள் குழுவின் செயல்பாடுகள் குறித்தும் மாணவர்களிடையே விளக்கப்பட்டது. மேலும் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு விடை கூறிய மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி ஊக்கப்படுத்தப்பட்டது. பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் பாலசுப்பிரமணியன் அனைவரையும் வரவேற்று முகாமை வழி நடத்தினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...