திருப்பூரில் பாஜக மாநில துணைத் தலைவரை கண்டித்து ஆர்ப்பாட்டம்

ரயில்வே போலீசாரை வைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்குழு உறுப்பினர் சாமுவேல்ராஜை மிரட்டி, அதனை வீடியோ பதிவாக டிவிட்டரிலும் வெளியிட்ட நாராயணன் திருப்பதி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு பாஜக மாநில துணைத் தலைவருக்கு எதிராக தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



சென்னை - கோவை சென்ற சதாப்தி ரயிலில் கடந்த 22ஆம் தேதி பாஜகவின் மாநில துணைத்தலைவரும், செய்தி தொடர்பாளருமான நாராயணன் திருப்பதி சேலம் நோக்கி வந்துகொண்டிருந்தார். அதே ரயிலில் பயணித்துக் கொண்டிருந்த சக பயணி ஒருவர் செய்தித்தாள்களில் வந்த செய்தியை ஆதாரமாகக் கொண்டு பிரதமர் மோடியை விமர்சித்து வந்ததால் நாராயணன் திருப்பதி அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

ரயிலில் பயணித்துக் கொண்டிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்குழு உறுப்பினரும், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைப்பின் பொதுச் செயலாளருமான சாமுவேல்ராஜ், நாராயணன் திருப்பதி செயலை கண்டித்தபோது பாஜகவின் மாநில துணைத்தலைவர் மற்றும் ரயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினர் என அதிகாரத்தை பயன்படுத்தி ரயில்வே போலீசாரை வைத்து சாமுவேல்ராஜை மிரட்டியுள்ளார்.



அதனை வீடியோ பதிவாக டிவிட்டரிலும் வெளியிட்ட செயலுக்குக் கண்டனம் தெரிவித்தும் நாராயணன் திருப்பதி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



இந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிய, பெரியாரிய, அம்பேத்கரிய அமைப்பின் நிர்வாகிகள் ஏராளமானார் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...