எங்கள் பணியை வரன்முறைப்படுத்துங்கள்..! - திருப்பூர் டாஸ்மாக் ஊழியர் பேசும் வீடியோ வைரல்

அரசாங்கம் எதுவும் தருவதில்லை. எங்கள் பணியை வரன்முறைப்படுத்தினால் மட்டுமே மதுபாட்டிலுக்கு கூடுதல் தொகை வாங்குவதை நிறுத்த முடியும் என திருப்பூரை சேர்ந்த தற்காலிகம் அடிப்படையில் பணிபுரியும் டாஸ்மாக் ஊழியர் பேசும் வீடியோ வைரல்.



திருப்பூர்: மதுப்பாட்டில்களுக்கு கூடுதல் பணம் வாங்குவது குறித்து திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர் பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

திருப்பூர் அண்ணாநகரில் டாஸ்மாக் மதுபானக்கடை எண் 2312 செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த கடையில் பணி புரியும் விற்பனையாளரிடம் மதுபாட்டிலுக்கு பத்து ரூபாய் கூடுதலாக வாங்குவது குறித்து குடிமகன் ஒருவர் கேட்டபோது, கடைக்கு வாகனத்தில் கொண்டு வந்து மதுபான பாட்டில்களை இறக்கி வைக்கும் கூலியாட்களுக்கும், பர்மிட் எழுதுபவர்களுக்கும் நாங்கள் தான் பணம் தருகிறோம்.

அரசாங்கம் எதுவும் தருவதில்லை. எங்கள் பணியை வரன்முறைப் படித்தினால் தான் அரசாங்கத்திலிருந்து தருவார்கள். அதுவரை தற்காலிகமாக பணி புரியம் நாங்கள், இதுபோன்று மதுபாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்து அதிலிருந்து தான் மேற்கண்ட செலவுகளை சமாளிக்க முடியும் என்று டாஸ்மாக் விற்பனையாளர் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...