பாட்டில் தர்ரியா...இல்ல பணம் தர்ரியா? - கோவையில் டாஸ்மாக் பணியாளரிடம் அடாவடி செய்த ரவுடி கும்பல் கைது!

கோவை ரத்தினபுரி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மதுகுடிக்க பணம் இல்லாததால், காசாளரிடம் கத்தியை காட்டி மிரட்டி, பணம் பறித்துச் சென்ற 3 கொண்ட ரவுடி கும்பலை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


கோவை: கோவை ரத்தினபுரி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் காசாளரை மிரட்டி பணம் பறித்துச் சென்ற 3 பேர் கொண்ட ரவுடி கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை ரத்தினபுரி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் காசாளராகப் பணிபுரிவர் பிரகாஷ். இவர் பணியாற்றும் டாஸ்மாக் கடையில் உள்ள பாரில் மது அருந்த கார்த்திக் என்ற நபர் அடிக்கடி வருகை தருவார். கார்த்திக் தனியாக வராமல் பெரும்பாலும் தனது நண்பர் பட்டாளத்துடன் வந்து மது குடித்து விட்டு செல்வது வழக்கம்.

இந்த நிலையில் கார்த்திக் தனது நண்பர்களான லிங்கா பூபதி மற்றும் விக்னேஸ்வரன் ஆகியோருடன் வந்து டாஸ்மாக் கடையின் காசாளர் பிரகாஷிடம் மதுபாட்டில் கேட்டுள்ளனர். அப்போது, பிரகாஷ், மது பாட்டில் தருவதற்கு பணம் கொடுக்குமாறு கூறியுள்ளார்.

அதற்கு கார்த்திக், பணம் இல்லை என்றும் மதுபாட்டில் வேண்டுமென்றும் கேட்டதாகக் கூறப்படுகிறது. அதற்கு டாஸ்மாக் காசாளர், பணம் தராமல், மது பாட்டில் தர மாட்டேன் என மறுத்துள்ளார். இதனால் கோபம் அடைந்த கார்த்திக் மற்றும் அவனது நண்பர்கள் காசாளர் பிரகாஷை தகாத வார்த்தையில் திட்டியுள்ளனர்.

இதனையடுத்து, மது பருக பாட்டில் தர்ரியா? அல்லது பணம் தர்ரியா? என்று கத்தியை காட்டி மிரட்டி 200 ரூபாய் பணம் பறித்துக் கொண்டு, மூவரும் தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக, காசாளர் பிரகாஷ் ரத்தினபுரி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார், கார்த்திக் உள்ளிட்ட மூன்று பேரையும் கைது செய்துள்ளனர். விசாரணையில், மூன்று பேர் மீதும் பல்வேறு குற்ற வழக்குகள் காவல் நிலையங்களில் நடந்து வருவது தெரியவந்துள்ளது.

அதுமட்டுமின்றி, போலீசாரின் மாஸ் ரைடில் கைது செய்யப்பட வேண்டிய ரவுடிகளின் பட்டியலில் இவர்கள் மூன்று பேரின் பெயரும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...