கோவை அருகே குழந்தைகளை விரட்டிய நபரை தட்டிக்கேட்ட 4 பேருக்கு கத்திக்குத்து! - பரபரப்பு

கோவை போத்தனூர் பகுதியில் தெருவில் விளையாடிய குழந்தைகளை செங்கல்லை எடுத்துக்காட்டி விரட்டியடித்த நபரிடம், அதைத் தட்டிக்கேட்க வந்த 4 பேரை கத்தியால் குத்திய கோபாலகிருஷ்ணன் என்ற நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


கோவை: கோவை மாவட்டம் போத்தனூர் அருகே குழந்தைகளை விரட்டியது ஏன் என தட்டிக்கேட்ட 4 பேரை கத்தியால் குத்திய தொழிலதிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

போத்தனூர் பகுதியில் வசிப்பவர் கோபால கிருஷ்ணன். இவர் இரும்பு தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் மேட்டூர், போத்தனூர் அருகே உள்ள அங்கமுத்து கவுண்டர் வீதியில் குழந்தைகள் சிலர் விளையாடிக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த கோபாலகிருஷ்ணன், குழந்தைகள் இந்த தெருவில் விளையாடக் கூடாது என்று தெரிவித்து செங்கலை எடுத்து காட்டி விரட்டியடித்ததாக கூறப்படுகிறது.

அப்போது அங்கு வசிக்கும் சிலர், குழந்தைகள் ஏன் விளையாட கூடாது? ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று கோபாலகிருஷ்ணனை பார்த்து கேட்டிருக்கின்றனர். அப்போது கோபமடைந்த கோபாலகிருஷ்ணன் கேள்வி கேட்டவர்களை தகாத வார்த்தையில் திட்டியதாக கூறப்படுகிறது.

மேலும், அவர் வைத்திருந்த கத்தியை எடுத்து பிரதீப் என்ற நபரை தாக்கியுள்ளார். இதைத் தடுக்க வந்த நபர்களையும் கோபாலகிருஷ்ணன் கத்தியால் குத்தியதாக தெரிகிறது. இதில் பிரதீப்பிற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

அதேபோன்று செந்தில் என்பவருக்கு இடது வயிற்றுப் பகுதியிலும், கண்ணன் என்பவருக்கு இடது கை பகுதிகளும், செந்தில்குமாருக்கு முதுகு பகுதியில் காயம் ஏற்பட்டிருக்கிறது.

கோபாலகிருஷ்ணன் கத்தியால் குத்தியதில் காயமடைந்த செந்தில்குமார் அரசு மருத்துவமனையிலும் மற்ற மூவரும் தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் போத்தனூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கோபால கிருஷ்ணனை கைது செய்து, கத்தியையும் பறிமுதல் செய்ததோடு, சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...