கோவையில் கஞ்சா விற்பனை - கல்லூரி மாணவர்கள், ஐடி ஊழியர் உட்பட 4 பேர் கைது!

கோவை பாப்பநாயக்கன் பாளையம் மற்றும் ரத்தினபுரி ஆகிய பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள், ஐடி ஊழியர் உட்பட 4 பேரை கைது செய்த ரேஸ்கோர்ஸ் போலீசார், 1,400 கிராம் கஞ்சா பொட்டலங்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.


கோவை: கோவை மாவட்டத்தில் இருவேறு இடங்களில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் மற்றும் ஐடி ஊழியர் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவையில் கஞ்சா புழக்கத்தை தடுக்க மாநகர போலீசார் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் அடிப்படையில், போலீசார் அவ்வப்போது ரோந்து சென்று கஞ்சா வியாபாரிகளை கைது செய்து வருகின்றனர்.

இந்நிலையில், கோவை பாப்பநாயக்கன் பாளையம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக பந்தய சாலை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் விரைந்து சென்ற போலீசார், சந்தேகத்துக்கிடமான வகையில் நின்றிருந்த மூன்று பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

அப்போது, கஞ்சா போதையில் இருந்த 3 பேரும் கேரளாவை சேர்ந்த சூர்யா (25), பொள்ளாச்சியை சேர்ந்த அகிலன் (20) மற்றும் புதுக்கோட்டை சார்ந்த இமான்சா (18) ஆகியோர் கஞ்சா விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

மென்பொருள் பணியாளராக சூர்யா பணியாற்றுவதும், அகிலன் மற்றும் இமான்சா இருவரும் கல்லூரியில் படித்து வருவதும் போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. மேலும், இவர்களிடமிருந்து 300 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

இதேபோல், ரத்தினபுரி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சாஸ்திரி நகர் பகுதியில் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்த சஞ்சு (19) என்ற இளைஞரையும் போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய சோதனையில், 1கிலோ 100 கிராம் அளவிலான கஞ்சா பொட்டலங்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

இதனையடுத்து அவரை கைது செய்த ரத்தினபுரி போலீசார், கூட்டாளிகள் அமர்நாத், கெளதம் இருவரை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...