கோவையில் அறிவுரை செய்த ஆட்டோ ஓட்டுநருக்கு அடி உதை - மர்ம கும்பலுக்கு போலீஸ் வலை!

கோவை சாய்பாபா காலனி அருகே ஆட்டோவில் மோதுவது போல் வந்ததால், பாதுகாப்பாக செல்லுங்கள் என அறிவுரை கூறிய ஆட்டோ ஓட்டுநரை, இருசக்கர வாகனத்தில் வந்த நபர்கள் அடித்து உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவை மாவட்டம் சாய்பாபா காலணி அருகே இருசக்கர வாகனத்தில் வந்தவர்களை பாதுக்காப்பாக செல்ல அறிவுறுத்திய ஆட்டோ ஓட்டுனரை தாக்கிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கோவை சிட்கோ பகுதியில் வசிப்பவர் ஆட்டோ ஓட்டுநர் ஜான்சா. நேற்று மாலை 6.45 மணியளவில் சாய்பாபா காலனி சிக்னல் அருகே ஆட்டோவில் நின்றுகொண்டு இருந்துள்ளார்.

அப்போது அவரது ஆட்டோவை இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து வந்த நபர்கள் ஆட்டோ மீது மோதுவது போல் வந்துள்ளனர். இதனை கண்ட அவர், இருசக்கர வாகனத்தில் இருந்த 3 பேரையும், பாதுகாப்பாக போகும்படி அறிவுறுத்தி உள்ளார்.

இதனால் கோபம் அடைந்த மூன்று பேரும், ஜான்சா ஆட்டோ சிக்னலை கடந்து செல்லும் பொழுது வழிமறித்து, வலுக்கட்டாயமாக இழுத்து வெளியே தள்ளி, அங்கிருந்த இரும்பு கம்பியால் அடித்து உதைத்துள்ளனர்.

தன்னை அடிக்க வேண்டாம் என ஜான்சா கேட்டபோதும், மதுபோதையில் இருந்த அந்த மர்ம நபர்கள் அடித்ததில், தலையில் அடிபட்டு ரத்த வெள்ளத்தோடு இருந்த போதும் யாரும் அக்கம் பக்கத்தினர் உதவ முன் வரவில்லை என கூறப்படுகிறது.

பின்னர், அந்த மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. ரத்த வெள்ளத்தோடு தன்னை மர்ம நபர்கள் அடித்து உதைத்ததாக சாய்பாபா காவல் நிலையத்தில் ஜான்சா புகார் அளித்தார்.

அந்தப் புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த சாய்பாபா காலனி போலீசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளைக் கொண்டு மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.

வாகனத்தில் பாதுகாப்பாக செல்லுங்கள் என்று அட்வைஸ் செய்த ஆட்டோ ஓட்டுனரை மர்ம கும்பல் அடித்து உதைத்த சம்பவம் சாய்பாபா காலனி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...