கோவையிலிருந்து கேரளாவுக்கு கடத்தப்பட்ட 600 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் - ஒருவர் கைது!

கோவை வேலாண்டிபாளையம் அருகே கார் மூலம் கேரளாவிற்கு கடத்தப்படவிருந்த 600 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த குடிமைப்பொருள் வழங்கல் அதிகாரிகள், ஓட்டுநரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: கோவை மாவட்டம் வேலாண்டி பாளையம் அருகே கார் மூலம் கேரளாவுக்கு கடத்த 600 கிலோ ரேஷன் அரிசியை குடிமை பொருள் வழங்கல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

கோவையிலிருந்து சரக்கு வாகனங்கள், கார்கள் மற்றும் ரயில் மூலமாக கேரளாவுக்கு சட்டவிரோதமாக ரேஷன் அரிசிகள் கடத்தப்படுவது வழக்கமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் குடிமை பொருள் அதிகாரிகள் அவ்வப்போது தணிக்கையில் ஈடுபட்டு ரேஷன் அரிசிகளை பறிமுதல் செய்தும், கடத்தல் காரர்களை கைது செய்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கோவை மாவட்டம் வேலாண்டிபாளையம் அடுத்த மல்லேஸ்வரி நகரில், குடிமை பொருள் வழங்கல் ஆய்வாளர் மேனகா, உதவி ஆய்வாளர் ஞானசேகரன் அடங்கிய தனிப்படை போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அவ்வழியாக வந்த மாருதி எஸ்டீம் கார் ஒன்றை தணிக்கை செய்தனர். அப்போது, காரின் பின்புறம் 12 மூட்டைகளில் 600 கிலோ எடை கொண்ட பொது விநியோக திட்ட ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.



இதனையடுத்து வாகனத்தை ஓட்டி வந்த மோகன் என்ற நபரை அதிகாரிகள் கைது செய்தனர். மேலும், கடத்தி வரப்பட்ட ரேஷன் அரிசி, கடத்தலுக்காக பயன்படுத்தப்பட்ட கார் உள்ளிட்டவையும் பறிமுதல் செய்யப்பட்டது.

கைதான நபரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், குறைந்த விலையில் ரேஷன் அரிசிகளை கொள்முதல் செய்து, அதிக லாபத்துடன் வட மாநில தொழிலாளர்களுக்கும், மாவு அரைக்கும் மில்களுக்கும் அரிசி சப்ளை செய்து வந்தது உறுதியானது.

இதுபோன்று சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என குடிமைப் பொருள் வழங்கல் புலனாய்வு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...