கோவை அருகே விவசாய தோட்டத்தில் புகுந்த ஒற்றை காட்டுயானை - வாழை, தென்னை மரங்கள் சேதம்!

கோவை பன்னிமடை அடுத்த நஞ்சுண்டாபுரம் பகுதியில் விவசாய தோட்டத்தில் புகுந்த ஒற்றை காட்டு யானை, அங்கிருந்த வாழை மற்றும் தென்னை மரங்களை சேதப்படுத்திய சம்பவம் விவசாயிகளிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


கோவை: கோவை மாவட்டம் பன்னிமடை அருகே விவசாய தோட்டத்திற்குள் புகுந்த காட்டு யானை ஒன்று அங்கிருந்த வாழை மற்றும் தென்னை மரங்களை சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை ஆனைகட்டி மலைப்பகுதியில் 50க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் உள்ளன. இவை உணவு தேடி மலையடிவாரப் பகுதிகளான மாங்கரை, தடாகம், பன்னிமடை, வரப்பாளையம், நஞ்சுண்டாபுரம் உள்ளிட்ட பகுதியில் உள்ள தோட்டங்களுக்கு அடிக்கடி வந்து செல்கின்றன.



இந்த நிலையில், ஒன்றரை மாத இடைவெளிக்கு பிறகு நேற்றிரவு பன்னிமடையை அடுத்த நஞ்சுண்டாபுரம் பகுதியில் உள்ள பிரபு துரைசாமி என்பவரது தோட்டத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை தோட்டத்திலிருந்த வாழை மரங்கள் மற்றும் தென்னை மரங்களை வேரோடு பிடுங்கி சேதப்படுத்தி விட்டுச் சென்றுள்ளது.

இது குறித்து விவசாயிகள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து சேதங்கள் குறித்து சம்பவ இடத்தில் வனத்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...