கோவை சிறுமியிடம் இன்ஸ்டாகிராமில் பழகி பாலியல் தொல்லை - இளைஞர் போக்சோவில் கைது!

கோவையில் பள்ளி சிறுமியிடம் இன்ஸ்டாகிராமில் பழகி, பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய இளைஞரை, மகளிர் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.



கோவை: கோவை அருகே பள்ளிச்சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

கோவை சேர்ந்த 16 வயது சிறுமி, அப்பகுதியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு 2021 ஆம் ஆண்டு திருவிழா ஒன்றில் கார்த்திகேயன் என்ற இளைஞருடன் நட்பு ஏற்பட்டுள்ளது.

பின்னர் இருவரும் இன்ஸ்டாகிராமில் பழகி வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சிறுமியை காதலிப்பதாக கார்த்திகேயன் தெரிவித்திருக்கிறார்.

இதைத் தொடர்ந்து, ஜூன் மாதம் சிறுமி வீட்டில் தனியாக இருந்தபோது அங்கு சென்ற கார்த்திகேயன் திருமணம் செய்து கொள்வதாக கூறிய இருவரும் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே உடல்நிலை சரியில்லை என்று மருத்துவமனைக்கு சென்றபொழுது சிறுமி கர்ப்பமாக இருப்பது பெற்றோருக்கு தெரியவந்துள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து இளைஞர் கார்த்திகேயனை, போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...