பல்லடம் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்கள் மீது கல்வீசி தாக்குதல் - காவல்துறை விசாரணை!

பல்லடம் அடுத்த வாவிபாளையம் அருகேயுள்ள முத்தூரில் அரசு நிலம் ஆக்கிரமிப்பு குறித்து முதல்வரின் தனிப்பிரிவில் புகார் கொடுத்தவரின் வீட்டில் தனியாக இருந்த பெண்கள் மீது கற்களை வீசி தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அரசு நில ஆக்கிரமிப்பு குறித்து புகார் அளித்தவரின் வீட்டில் தனியாக இருந்த பெண்கள் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பல்லடத்தை அடுத்த வாவிபாளையம் அருகேயுள்ள முத்தூரை சேர்ந்தவர் மோகன் (38). இவர் தனது மனைவி பானுப்பிரியா மகன் ராம் விக்னேஷ் ஆகியோருடன் வசித்து வருகிறார்.



மேலும் தனக்கு சொந்தமான 6 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். இவரது நிலத்தின் அருகே மாநில நெடுஞ்சாலை மற்றும் அரசுக்கு சொந்தமான நிலம் இருப்பதாக கூறப்படுகிறது.

குறிப்பிட்ட அந்த நிலத்தில் நடராஜ் என்பவர் சட்ட விரோதமாக ஆக்கிரமிப்பு செய்து கட்டிடம் கட்டி மின் இணைப்பும் பெற்று தேங்காய் களம் வைத்து நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

இது குறித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு விவசாயி மோகனின் உறவினரான புவனேஸ்வரன் என்பவர், அரசு நில ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி தமிழக முதல்வரின் தனி பிரிவிற்கு புகார் அளித்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக வருவாய் பொதுப்பணி மற்றும் மாநில நெடுஞ்சாலைத் துறையினர் விசாரணை நிலுவையில் இருந்து வருகிறது.

இந்நிலையில், விவசாயி மோகனின் மனைவி, மகன் மற்றும் அவரது சித்தி கலாமணி ஆகியோர் வீட்டில் இருந்தபோது அதே பகுதியை சேர்ந்த பொன்னுச்சாமி, அவரது மனைவி சரஸ்வதி ஆகியோர் அங்கு வந்துள்ளனர்.

மோகன் உடல் நலக்குறைவால் வீட்டில் இருந்ததை பயன்படுத்திக் கொண்ட அவர்கள், பானுப்பிரியா மற்றும் அவருடன் இருந்த உறவினர் கலாமணி ஆகியோர் மீது கற்களை வீசி தகாத வார்த்தைகளால் திட்டி, தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.



இதில் காயமடைந்த கலாமணி பல்லடம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.



இதுகுறித்து பாதிக்கப்பட்ட பானுப்பிரியா கூறியதாவது,

அரசு நில ஆக்கிரமிப்பு குறித்து முதல்வரின் தனிப்பிரிவில் புகார் அளித்ததற்கு நடராஜ் என்பவர் தூண்டுதலின் பேரில் பொன்னுச்சாமி மற்றும் அவரது மனைவி தங்களை சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.

போலீசார் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...