உடுமலை அருகே மூதாட்டியிடம் பட்டப்பகலில் 2.5 சவரன் நகை பறிப்பு - இளைஞர்கள் 2 பேர் கைது!

உடுமலை அடுத்த காந்திநகரில் கோயிலுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய மூதாட்டியின் கழுத்தில் இருந்த 2.5 சவரன் நகைகளை பட்டப்பலில் பறித்துச் சென்ற 2 இளைஞர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மூதாட்டியிடம் நகைப்பறிப்பில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

உடுமலை அடுத்த யசோதா ராமலிங்கம் லே-அவுட் பகுதியை சேர்ந்தவர் ராஜம்மாள் (80). இவருக்கு திருமணம் ஆகாததால் தனது சகோதரருடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில், ராஜம்மாள் கடந்த 12ஆம் தேதி உடுமலை காந்திநகரில் உள்ள விநாயகர் கோவிலுக்கு சென்றுள்ளார். சாமி தரிசனத்தை முடித்துக்கொண்டு வீட்டுக்கு நடந்து சென்ற போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம நபர்கள், அவரது கழுத்தில் இருந்த 2.5 சவரன் நகையை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.

பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் குறித்து ராஜம்மாள் உடுமலை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதைத்தொடர்ந்து திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மர்ம ஆசாமிகளை பிடிப்பதற்கு தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்.

அதன் பேரில், தனிப்படை போலீசார் அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து தலைமறைவான மர்ம ஆசாமிகளை பல்வேறு பகுதியில் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில் உடுமலை பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில், வந்த 2 பேரை சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.



அப்போது, சங்கிலி பறிப்பு சம்பவம் நடந்த பகுதியில் பதிவான கண்காணிப்பு கேமரா பதிவுகளில் இருந்த 2 பேரும் அவர்கள் தான் என்பது உறுதிசெய்யப்பட்டது. தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், இருவரும் கோவையை சேர்ந்த சரவணன் (31), கண்ணன் (20) என்பது தெரியவந்தது.

மூதாட்டி ராஜம்மாளிடம் தங்கச்சங்கிலியை பறித்துச் சென்றதையும் அவர்கள் போலீசாரிடம் ஒப்புக்கொண்டுள்ளனர். இதையடுத்து அவர்களிடம் இருந்த நகையை பறிமுதல் செய்ததுடன், இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...