மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் வருகை - கோவையில் பாஜகவினர் உற்சாக வரவேற்பு!

தமிழகத்தில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்காக கோவை விமான நிலையம் வந்த மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி-க்கு, பாஜக கோவை மாநகர் மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.


கோவை: மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி தமிழகத்திற்கு இரண்டு நாள் சுற்றுப்பயணமாக வந்துள்ளார்.

இன்று திருப்பூர் மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்கிறார். அதனைத் தொடர்ந்து, நாளை கோவையில் பாஜக சார்பில் நடைபெறும் கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு நாளை பிற்பகல் டெல்லி புறப்படுகிறார்.



இதனையொட்டி, இன்று கோவை விமான நிலையம் வந்தடைந்த அவருக்கு கோவை மாவட்ட பாஜக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அமைச்சருக்கு பாஜக கோவை மாநகர் மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி, விவசாய அணி தலைவர் ஜி.கே.நாகராஜ், மாநில செயலாளர் ஏ.பி.முருகானந்தம், பேராசிரியர் கனகசபாபதி உள்ளிட்டோர் அவருக்கு பொன்னாடை அணிவித்து வரவேற்பு அளித்தனர். அதனைத் தொடர்ந்து மத்திய அமைச்சர்கிஷன் ரெட்டி சாலை மார்க்கமாகதிருப்பூர் புறப்பட்டார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...