கோவையில் அரசுப் பேருந்து மீது ஆம்னி பேருந்து மோதி விபத்து - போலீசார் விசாரணை

கோவை காந்திபுரம் சிக்னலில் மெதுவாகச் சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்து மீது ஆம்னி பேருந்து மோதி விபத்தில் ஒருவர் காயமடைந்தார். காலை நேரம் என்பதால் சாலையோரம் மக்கள் நடமாட்டம் இல்லாததால், அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை.


கோவை: கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்திலிந்து வடக்கு நோக்கி சிக்னல் அருகே அரசு விரைவுப் பேருந்து சென்று கொண்டிருந்தது. அதன் பின்னால் தனியார் ஆம்னி பேருந்து சென்றது.



அப்போது சிக்னல் அருகே பேருந்துகள் ஒன்றன் பின் ஒன்றாக பயணித்துக்கொண்டிருந்த நிலையில், எதிர்பாராத விதமாக அரசு பேருந்து மீது ஆம்னி பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இதனால் முன் சென்ற பேருந்து சாலையின் ஓரம் ஒதுங்கி கடை வாசலுக்கு சென்றது.



சாலையின் இடதுபுறம் இருந்த சிறு கடைகள் தடுப்புகள் தகர இரும்பு பெட்டிகள் உள்ளிட்டவற்றின் மீது மோதி கடை வாசலில் மோதி நின்றது. ஆம்னி பேருந்து அரசுப் பேருந்தின்மீது மோதியவுடன், அரசுப்பேருந்தின் ஓட்டுநர் உடனடியாக பிரேக் போட்டு கடை மீது பேருந்து மோதாமல் தடுத்துவிட்டார்.

காலை நேரம் என்பதால் சாலையோரம் மக்கள் நடமாட்டம் இல்லாததால், அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. இருப்பினும், கடையில் இருந்த ஒரு நபர் மீது பேருந்து மோதியதில் அவர் லேசான காயம் அடைந்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த மாநகர காவல்துறையினர், விபத்துக்கான காரணம் குறித்து பேருந்து ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...