'கனிம வளக் கடத்தலை தடுக்காவிட்டால்..!' - பாஜக தலைவர் அண்ணாமலை எச்சரிக்கை

தமிழகத்தில் நடைபெற்றுவரும் கனிமவளக் கொள்ளையை தடுக்கவிட்டால் பொள்ளாச்சியைச் சுற்றியுள்ள 11 சோதனைச் சாவடிகளில் பாஜக தொண்டர்களுடன் லாரிகளை தடுத்து நிறுத்துவேன் என்று பொள்ளாச்சி அருகே நடந்த கனிமவள கடத்தலுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை எச்சரித்தார்.



கோவை: கேரளாவுக்கு கனிம வளங்கள் கடத்திச் செல்வதை கண்டித்து கோவை தெற்கு மாவட்ட பாஜக சார்பில் கிணத்துக்கடவு அரசம்பாளையம் பிரிவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



மாவட்டத் தலைவர் வசந்த ராஜன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார்.



இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாஜகவினர், கேரளாவுக்கு கனிம வளங்களை கடத்திச் செல்வதைத் தடுக்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.



ஆர்ப்பாட்டத்தில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழகத்தில் உள்ள கனிம வளங்களை தமிழக அரசு கேரளாவுக்கு தாரைவார்த்து வருவதாகவும், இன்னும் 20 நாட்களுக்குள் கனிம வளங்களை லாரிகளில் கடத்திச் செல்வதை தடுக்காவிட்டால் பொள்ளாச்சி பகுதியில் சுற்றி உள்ள 11 சோதனைச் சாவடுகளிலும் பாஜக தொண்டர்களுடன் லாரிகளை தடுத்து நிறுத்துவேன் என்றார். மேலும், எங்களை தாண்டி ஒரு லாரி இங்கிருந்து எப்படி கேரளாவுக்கு செல்கிறது எனப் பார்த்துவிடலாம் என்றும் அவர் சவால்விட்டார்.



இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக மாவட்ட பொறுப்பாளர் மோகன் மந்திராசலம், மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம், விவசாய அணி மாநில தலைவர் ஜி.கே நாகராஜன், விவசாய அணி மாநில துணைத்தலைவர் குமரேசன், எஸ்.மேட்டுப்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் சாந்தகுமார், பாஜக மாவட்ட துணைத் தலைவர் தனபாலகிருஷ்ணன், மாவட்ட ஊடகப் பிரிவு தலைவர் இளங்கோவன் உள்ளிட்ட ஏராளமான பாஜகவினர் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...