கோவையில் ஏப்ரல் 8ஆம் தேதி சங்கர் மகாதேவன் இசை நிகழ்ச்சி - ஆன்லைனில் டிக்கெட் விற்பனை துவக்கம்!

கோவை எஸ்.எஸ்.குளம் பகுதியில் உள்ள ஆதித்யா கல்லூரி மைதானத்தில் வரும் ஏப்ரல் 8ஆம் தேதி மாலை 6 மணிக்கு பிரபல பாடகர் சங்கர் மகாதேவன் இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது, இதற்கான டிக்கெட் விற்பனை ஆன்லைனில் துவங்கியுள்ளது.


கோவை: கோவையில் வரும் எப்ரல் 8ஆம் தேதி நடைபெறவுள்ள பிரபல பாடகர் சங்கர் மகாதேவன் இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட் விற்பனை துவங்கியுள்ளது.

கோவை எஸ்.எஸ்.குளம் பகுதியில் உள்ள ஆதித்யா தனியார் கல்லூரி மைதானத்தில் ஏப்ரல் 8ம் தேதி பிரபல பாடகர் சங்கர் மகாதேவனின் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சி குறித்தான செய்தியாளர் சந்திப்பு ஆதித்யா கல்லூரி அரங்கில் நடைபெற்றது.

இதில் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரான மௌனராகம் முரளி கூறியதாவது

ஏப்ரல் 8ம் தேதி மாலை ஆறு மணிக்கு நடைபெற உள்ள இந்த இசை நிகழ்ச்சியில் பிரபல பாடகர் சங்கர் மகாதேவன் பங்கேற்க உள்ளார்.

இந்நிகழ்ச்சிகளுக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைன் டிக்கெட் புக்கிங் தளங்களான Bookmyshow உள்பட பல்வேறு தளங்களில் துவங்கி உள்ளது. டிக்கெட்டின் விலை 500 முதல் 2000 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் உட்பட யார் மொத்தமாக புக்கிங் செய்தாலும் சிறப்புச் சலுகை அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

கோவையில் முதல் முறையாக நடைபெறவுள்ள சங்கர் மகாதேவனின் இசை நிகழ்ச்சியில் சுமார் 15,000 பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதிலிருந்து பெறப்படும் தொகையில் ஒரு பகுதியை இசைக்கலைஞர்கள் நலனுக்காக வழங்கப்பட உள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...