கோவையில் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்த காட்டு யானைகள் - பரபரப்பு

கோவை மருதமலை அருகே ஒரு குட்டியுடன் கூடிய 5 யானைகள் மற்றும் சின்னதடாகம் பகுதியிலும் காட்டு யானை ஒன்று குடியிருப்பு பகுதியில் புகுந்த நிலையில், ரோந்து பணியில் ஈடுபட்ட வனத்துறையினர் யானைகளை வனப்பகுதிக்கு விரட்டினர்.


கோவை: கோவை மாவட்டம் மருதமலை மற்றும் சின்னதடாகம் பகுதிகளில் நேற்றிரவு காட்டு யானைகள் புகுந்து வாழை மரங்களை சேதப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் வரும் சம்பவம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக வனத்துறையினர் இரவு பகலாக ரோந்து மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நேற்றிரவு கெம்பனூர் முதல் கணுவாய் பகுதி வரை யானைகளின் நடமாட்டத்தை 4 பேர் கொண்ட வனத்துறை குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளனர்.



அப்போது, மருதமலை சுற்றுவட்டார பகுதியான லேபர்ஸ் காலனி அருகேயுள்ள குடியிருப்பு பகுதிக்குள் நள்ளிரவில் ஒரு குட்டியுடன் கூடிய 5 யானைகள் நுழைந்தது. இதனையறிந்த வனத்துறையினர், யானைகளை மருமலையின் அடிவாரத்தில் உள்ள வனப்பகுதிக்கு விரட்டினர்.

இதேபோல், காட்டு யானை ஒன்று சின்னதடாகம் அருகேயுள்ள வாத்தியார் தோட்டம் பகுதியில் நள்ளிரவில் வெளியேறி உலா வந்தது. இதனையறிந்த வனத்துறையினர், அதனை காப்புக்காடு வனப்பகுதிக்கு விரட்டினர்.

இந்நிலையில், வனப்பகுதியில் இருந்து காட்டு யானைகள் வெளியேறாத வண்ணம் வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...