பொள்ளாச்சி சந்தையில் வரத்து குறைவு - வாழை இலை விலை உயர்வு

பொள்ளாச்சி தேர்நிலையில் உள்ள வார சந்தையில் வரத்துக் குறைவால் வாழை இலை விலை அதிகரித்துக் காணப்பட்டது. 7 ஆயிரம் இலைகள் கொண்ட ஒரு கட்டு வாழை இலை ரூ.3 ஆயிரத்திற்கு விற்பனை ஆனதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.


பொள்ளாச்சி: பொள்ளாச்சி சந்தையில் வாழை இலை வரத்துக்குறைவாக இருந்ததால், வாழை இலை கட்டின் விலை அதிகரித்துக் காணப்பட்டது.

பொள்ளாச்சி தேர்நிலையில் உள்ள சந்தையின் ஒரு பகுதியில், வாரத்தில் ஒரு குறிப்பிட்ட நாட்கள் வாழை இலை ஏலம் நடக்கிறது. வாழைத்தார் வெளி மாவட்டங்களில் இருந்து அதிகளவு கொண்டு வரப்பட்டாலும், வாழை இலை அதிகபட்சமாக ஆனைமலை, சேத்துமடை, அம்பாரம்பாளையம், நெகமம், கோமங்கலம், ஆழியார், கோட்டூர், சமத்தூர், வடக்கிபாளையம், பொன்னாபுரம், ராமபட்டிணம், கோபாலபுரம் உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களில் இருந்து கொண்டு வரப்படுகிறது.



இதை உள்ளூர் மற்றும் கேரள பகுதி வியாபாரிகள் குறிப்பிட்ட விலை நிர்ணயம் செய்து ஏலம் மூலம் வாங்கி செல்கின்றனர். திருமணம் உள்ளிட்ட விஷேச நாட்களில் அதற்கு தகுந்தாற்போல வாழை இலை விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இதில் கடந்த ஆண்டு பெய்த பருவமழையால் வாழை இலை அதிகளவு துளிர் விட்டது. இதனால் மார்க்கெட்டுக்கு வாழை இலை வரத்து அதிகரித்தது.

மேலும் விஷேச நாட்கள் ஒரளவு இருந்ததால் கூடுதல் விலைக்கு விற்பனையானது. இந்த மாதத்தில் கடந்த 2 வாரமாக விஷேச நாட்கள் குறைவாக இருந்ததாலும், இரவு நேரத்தில் பனியும், பகல் நேரத்தில் கடுமையான வெயில் காரணமாகவும், பல இடங்களில் வாழைகள் வாடி வதங்கி காணப்படுகிறது.

இதன் காரணமாக கடந்த சில வாரமாக சந்தைக்கு கொண்டு வரப்படும் வாழை இலை கட்டுகளின் அளவு வெகுவாக குறைந்தது. நேற்று நடந்த ஏலத்தின் போது, வாழை இலை கட்டுகளின் வரத்து மிகவும் குறைவாக இருந்தது. இதனால் வாழை இலை கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.

வாரந்தோறும் சுமார் 200க்கும் மேற்பட்ட வாழை இலை கட்டுகள் கொண்டு வரப்படும். ஆனால் 100க்கும் குறைவான இலை கட்டுகளே கொண்டு வரப்பட்டன. வாழை இலை வரத்து மிகவும் குறைவாக இருந்ததால் 7 ஆயிரம் எண்ணிக்கை கொண்ட வாழை இலை அதிகபட்சமாக ஒரு கட்டு ரூ.3 ஆயிரத்திற்கு விற்பனையானது. அதிலும் கேரள வியாபாரிகள் கலந்து கொண்டு இலைகட்டுகளை அதிகளவு வாங்கி சென்றதாக பொள்ளாச்சி சந்தை வியாபாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...