வார இறுதிநாளில் ஊட்டி தாவரவியல் பூங்காவிற்கு குவிந்த சுற்றுலா பயணிகள்!

ஊட்டி தாவரவியல் பூங்காவிற்கு வார இறுதிநாளான நேற்று மட்டும் 12,855 சுற்றுலா பயணிகள் வருகை புரிந்துள்ளனர். பூங்காவில் உள்ள பல்வேறு வெளிநாட்டு மரங்கள், செடிகள், கொடிகள் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது.


நீலகிரி: ஊட்டி தாவரவியல் பூங்காவிற்கு நேற்று ஒரே நாளில் 12,855 சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர்.

சுற்றுலா நகரமான ஊட்டிக்கு நாள்தோறும் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை புரிகின்றனா். சுற்றுலா பயணிகள், இங்குள்ள அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா சிகரம் உள்ளிட்ட முக்கியமான சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து செல்கின்றனா்.



இந்நிலையில் வார இறுதி நாளான நேற்று ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவுக்கு 12,855 சுற்றுலா பயணிகள் வருகை தந்தனா். பெரும்பாலானவா்கள் கேரளம், கா்நாடகம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்தனா். வெளிநாட்டினரும் அதிக அளவு வருகை தந்திருந்தனா். இவா்கள் மலை ரயிலில் பயணிக்க அதிக ஆா்வம் காட்டினா்.

ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் ஆண்டுதோறும் மே மாதம் மலா் கண்காட்சி நடைபெறும். இந்த ஆண்டு மலா் கண்காட்சிக்காக ஹாலந்து மற்றும் காஷ்மீரில் மட்டுமே மலரும் துலிப் மலா்கள் முதன்முறையாக ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் விதைகள் மூலம் வளா்க்கப்பட்டன.

பூங்காவிலுள்ள கண்ணாடி மாளிகையில் துலிப் மலா்கள் வெள்ளை, மஞ்சள், இளஞ்சிவப்பு, ரோஸ் மற்றும் ஊதா உள்ளிட்ட 5 வண்ணங்களில் பூத்து குலுங்குகின்றன. இதனை சுற்றுலா பயணிகள் பார்வையிட்டு குடும்பத்துடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனா்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...