கோத்தகிரி அருகே 20 அடி பள்ளத்தில் விழுந்த பசு மாடு பத்திரமாக மீட்பு

கோத்தகிரி அருகே உள்ள தாந்தநாடு பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த பசுமாடு 20அடி பள்ளத்தில் எதிர்பாராத விதமாக விழுந்தது. தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு பசுமாட்டை பத்திரமாக மாட்டை மீட்டனர்.


நீலகிரி: கோத்தகிரி அருகே 20 அடி பள்ளத்தில் விழுந்த மாடு பத்திரமாக மீட்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள தாந்த நாடு பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. மேலும் விவசாய நிலங்களும் அதிகளவில் உள்ளன. இப்பகுதியில் வசிக்கும் விவசாயி ஒருவர் தனது வீட்டில் பசு மாடுகளை வளர்த்து வருகிறார்.

இந்நிலையில் தனது மாடுகளை மேய்ச்சலுக்காக அழைத்துச் சென்றார். மாடுகள் அனைத்தும் மேய்ந்து கொண்டிருந்த நிலையில் பசுமாடு ஒன்று எதிர்பாராத விதமாக அப்பகுதியிலிருந்த மூடப்படாத 20 அடி பள்ளத்தில் கால் தவறி விழுந்தது.

இதனையடுத்து அதிர்ச்சி அடைந்த விவசாயி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்க முயற்சி செய்துள்ளார். மேலும், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் அளித்துள்ளார். தகவலின் பேரில் அப்பகுதிக்கு விரைந்த நிலைய அலுவலர் மாதன் மற்றும் கருப்பசாமி தலைமையிலான குழுவினர் நீண்ட நேரம் போராட்டத்திற்குப் பிறகு பசு மாட்டினை பத்திரமாக மீட்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...