ரேஷன் கடைகளை சீரமைக்க முன்வாருங்கள்..! - தொண்டு நிறுவனங்களுக்கு நீலகிரி ஆட்சியர் அழைப்பு!

நீலகிரி மாவட்டத்தில் பழுதடைந்த நிலையில் உள்ள 403 ரேஷன் கடைகளை சீரமைக்க தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் முன்வர வேண்டும் என்று நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித் தெரிவித்துள்ளார்.


நீலகிரி: பழுதடைந்த நிலையில் உள்ள ரேஷன் கடைகளை சீரமைக்க தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் முன்வர வேண்டும் என மாவட்ட கலெக்டர் அம்ரித் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

நீலகிரி மாவட்டத்தில் 403 ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த ரேஷன் கடைகள், கூட்டுறவு நிறுவனம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், சுய உதவி குழுக்கள், எஸ்டேட் நிறுவனத்தினர் ஆகியோரோல் நடத்தப்படுகிறது.

இவற்றில் பழுதடைந்து காணப்படும் ரேஷன் கடைகளை சீரமைப்பது தொடர்பாக தன்னார்வ தொண்டு நிறுவனங்களை அணுக முடிவு செய்யப்பட்டுள்ளது. கோத்தகிரியில் கோழிக்கரை, குஞ்சப்பனை, கொட்டக்கம்பை பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகள் டி.வி.எஸ் தன்னார்வ தொண்டு நிறுவனத்தாலும் செம்மனரை ரேஷன் கடை பர்ன்சைடு எஸ்டேட் நிர்வாகத்தாலும் சீரமைக்கப்பட்டுள்ளன.

கூடலூரில் ஸ்ரீமதுரை 1 மற்றும் 11 கொங்கர்மூலா, மண்வயல், குச்சி முச்சி, போஸ்பரா ஆகிய ரேஷன் கடைகள் டி.வி.எஸ் தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் சீரமைக்கப்பட்டுள்ளன. ஊட்டியில் பிங்கர் போஸ்ட் 1 மற்றும் 11, குன்னூர் வட்டத்தில் எடப்பள்ளி ரேஷன் கடை ஆகியவை நீலகிரி மாவட்ட எரிவாயு வினியோகஸ்தர் சங்கம் மூலம் சீரமைக்கப்பட்டு வருகின்றன.

இதேபோன்று நீலகிரி மாவட்டத்தில் உள்ள பழுதடைந்த ரேஷன் கடைகளை சீரமைக்க தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...