வால்பாறையில் பழங்குடியின மக்களின் விற்பனை அங்காடிக்கான அடிக்கல் நாட்டு விழா

வால்பாறை அருகேயுள்ள ஆதிவாசி, பழங்குடியின மக்கள், வன பகுதியில் விளையும் பொருட்களை விற்பனை செய்வதற்கான கடை அடிக்கல் நாட்டு விழாவில் வால்பாறை நகராட்சி ஆணையர் பாலு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அருகே ஆதிவாசி பழங்குடியினர் மக்களின் பொருட்களை விற்பனை செய்வதற்கான கடைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

வால்பாறை சுற்றுவட்டார வனப்பகுதியில் சுமார் 10 பேருக்கு மேற்பட்ட பழங்குடி கிராமங்கள் உள்ளன. இதில் சுமார் 500க்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். இந்த வனப்பகுதியில் விளையும் பொருட்களை விளையும் மிளகு, திப்பிலி, மஞ்சள், பூண்டு, ஏலக்காய், காபி, மூங்கில், அரிசி போன்றவை விளைவிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு விளைவிக்கப்படும் பொருட்களை அங்கு வசிக்கும் பழங்குடியின மக்கள், அதனை வால்பாறையில் உள்ள தனியார் கடைகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர். இவ்வாறு விற்பனை செய்வதால் அதிகப்படியான லாபம் கிடைக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், தங்களுக்கு தனியாக கடைகளை அமைத்து தர வேண்டும் என பழங்குடி மக்கள் மாவட்ட ஆட்சியரிடமும், சார் ஆட்சியரிடமும் பலமுறை மனு அளித்துள்ளனர். இதனிடையே ஆதிவாசி பழங்குடியின மக்கள் தலைவி ராஜலட்சுமி, கடந்த சில நாட்களுக்கு முன்பு பொள்ளாச்சி சார் ஆட்சியர் பிரியங்காவிடம் தங்களுக்கு வனப்பகுதியில் விளையும் பொருட்களை விற்பனை செய்ய, விலை அங்காடி கடை ஒன்று வேண்டும் என மனு அளித்தார்.

இதேபோல், நகராட்சி தலைவர் அழகுசுந்தரவல்லியிடமும் மனு அளித்திருந்தார். இந்நிலையில் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் ஆதிவாசி பழங்குடியினர் மக்கள் பயன்படுத்தும் வகையில் கடை ஒன்று அமைத்து தர முடிவு செய்யப்பட்டது.



இதற்காக கோவை தனியார் நிறுவனமான என்.எம்.சி.டி என்ற தன்னார்வலர் நிறுவனம் சங்கர் நாராயணன் மற்றும் ராயல் என்ஃபீல்டு புல்லட் கம்பெனி உதவியுடன் விற்பனை அங்காடி கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.



இந்த நிகழ்வில் வால்பாறை நகராட்சி ஆணையாளர் பாலு, நகராட்சி தலைவர் அழகு சுந்தரவல்லி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சண்முகம், வார்டு உறுப்பினர்கள் அன்பரசன், பால்சாமி, ராஜேஸ்வரி மற்றும் மூப்பர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...