புதிய வடிவ குப்பைத்தொட்டி விநியோகம் - காவல்துறை, பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கிய யங் இந்தியா!

கோவை மாநகரில் உள்ள பல்வேறு காவல் நிலைய வாகனங்கள், ரோந்து வாகனங்கள், பொதுமக்கள் வாகனங்களுக்கு யங் இந்தியா அமைப்பு சார்பில் நான்கு சக்கர வாகனங்களில் பயன்படுத்தும் வகையில் எளிய வடிவிலான குப்பை தொட்டி இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.



கோவை: யங் இந்தியா என்ற தன்னார்வ அமைப்பு அரசுடன் இணைந்து பல்வேறு சமூக சேவைகளை செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

அதன்படி நான்கு சக்கர வாகனங்களில் பயன்படுத்துகின்ற வகையில் எளிய வடிவிலான குப்பை தொட்டியை அறிமுகப்படுத்தி முதல் கட்டமாக கோவை மாநகர காவல் துறைக்கும் பொதுமக்களுக்கும் வழங்கி உள்ளது.

பயணங்கள் மேற்கொள்ளும் போது குப்பைகளை சாலைகளில் வீசாமல் இருப்பதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் இந்த முயற்சியை யங் இந்தியா அமைப்பு முன்னெடுத்துள்ளது.



முதல் கட்டமாக கோவை மாநகரில் உள்ள பல்வேறு காவல் நிலைய வாகனங்கள், ரோந்து வாகனங்கள், பொதுமக்கள் வாகனங்களுக்கு இந்த குப்பை தொட்டிகள் வழங்கப்பட்டு விழிப்புணர்வு தொடங்கப்பட்டுள்ளது.



இதனை கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் வழங்கி துவக்கி வைத்தார்.

மேலும், இதர அரசு வாகனங்கள் ஆட்டோக்களிலும் இதை விரிவுபடுத்த யங் இந்தியா அமைப்பு திட்டமிட்டுள்ளது.



இந்நிகழ்ச்சியில் பேசிய மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், யங் இந்தியா அமைப்பின் இந்த முயற்சி வரவேற்கத்தக்கது. இதனை வழங்கிய யங் இந்தியா அமைப்பினருக்கு நன்றிகள். இந்த முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள் என்றார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...