தாராபுரத்தில் மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் மாயம்? - வைரலாகப் பரவும் ஆடியோவால் பரபரப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் செல்லத்தை நேற்று இரவு முதல் காணவில்லை என்ற ஆடியோ பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிவருகிறது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் செல்லத்தை நேற்று இரவு முதல் காணவில்லை என சமூக வலைதளங்களில் வைரலான ஆடியோ பதிவு ஒன்று பரவி வருகிறது.

அதில் இன்ஸ்பெக்டர் செல்லம் நேற்று இரவு 8:45 மணிக்கு தாராபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு வெள்ளை நிற மாருதி 800 வெள்ளை நிற TN.7483 காரில் வந்ததாகவும், அதன்பிறகு அந்த கார் ஒட்டன்சத்திரம் புறவழிச் சாலையில் சென்று கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் பகுதியில் சென்றபோது கார் மர்மமானதுடன், அவரது தொலைபேசி ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த ஆடியோவில் கூறப்பட்டுள்ளது. மேலும், அவரது சக தோழியான மற்றொரு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மதனா, சக போலீசாருக்கு வாட்ஸ் அப் மூலம் அவரது புகைப்படத்தை அனுப்பி கண்டுபிடிக்க வேண்டும் எனவும் அதில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...