கோவை சிறுமுகை வனப்பகுதியில் இறந்து கிடந்த ஆண் யானை - வனத்துறை விசாரணை!

சிறுமுகை அடுத்த பெத்திக்குட்டை வனப்பகுதியில் 5 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை ஒன்று இறந்து கிடந்த நிலையில், வனத்துறை அதிகாரிகள், கால்நடை மருத்துவர்கள் குழுவினருடன் யானையின் இறப்புக்கான காரணத்தை கண்டறிய, உடற்கூறாய்வு பரிசோதனை மேற்கொண்டனர்.


கோவை: கோவை சிறுமுகை அருகே காப்புக்காட்டில் இறந்த நிலையில் ஆண் யானையின் சடலம் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிறுமுகை வனச்சரகத்துக்கு உட்பட்ட மோதூர் பெத்திக்குட்டை காப்புகாடு வனப்பகுதிக்குள் வனத்துறை ஊழியர்கள் ரோந்து சென்றனர். அப்போது கருப்பராயன் கோவில் அருகேயுள்ள வனப்பகுதியில் 5 வயது மதிக்கத்தக்க ஆண் யானை இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதுதொடர்பாக வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, கால்நடை மருத்துவர் குழுவுடன் வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். இதனையடுத்து, யானையில் உடலை வன அதிகாரிகளும் கால்நடை மருத்துவர்களும் ஆய்வு செய்தனர்.

இதனிடையே யானையின் உடலில் எந்த காயங்களும் இல்லாததால், யானை எப்படி இறந்தது என்பதை கண்டு பிடிப்பதற்காக இன்று உடற்கூறாய்வு பரிசோதனை நடைபெற்றது. இந்நிலையில், பரிசோதனையின் முடிவில் தான் யானை இறந்ததற்கான காரணம் தெரியவரும் என வன அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...