தாராபுரத்தில் பத்திரமாக வீடு திரும்பிய பெண் காவல் ஆய்வாளர் - வைரலாகப் பரவும் தோழியின் ஆடியோ!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் செல்லம், நல்ல முறையில் வீடு திரும்பியதாகவும், அவர் காணவில்லை என்கிற மாதிரி எல்லோரும் தப்பாக தேடிவிட்டதாக அவரது தோழியும் காவல் ஆய்வாளருமான மதனா மீண்டும் ஆடியோ வெளியிட்டுள்ளார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் செல்லத்தை நேற்று இரவு முதல் காணவில்லை என சமூக வலைதளங்களில் வைரலான ஆடியோ பதிவு ஒன்று பரவி வருகிறது.

அதில் இன்ஸ்பெக்டர் செல்லம் நேற்று இரவு 8:45 மணிக்கு தாராபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு வெள்ளை நிற மாருதி 800 TN.7483 காரில் வந்ததாகவும், அதன்பிறகு அந்த கார் ஒட்டன்சத்திரம் புறவழிச் சாலையில் சென்று கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் பகுதியில் சென்றபோது கார் மர்மமானதுடன், அவரது தொலைபேசி ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த ஆடியோவில் கூறப்பட்டிருந்தது. மேலும், அவரது சக தோழியான மற்றொரு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மதனா, சக போலீசாருக்கு வாட்ஸ் அப் மூலம் அவரது புகைப்படத்தை அனுப்பி கண்டுபிடிக்க வேண்டும் எனவும் அதில் கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது.

அதன் பிறகு இன்று ஒரு ஆடியோ மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது, அதில், இன்ஸ்பெக்டரின் தோழி மதனா கூறுகையில், தாராபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் செல்லம், நல்ல முறையில் வீட்டிற்கு வந்துவிட்டதாகவும், குடும்ப பிரச்சனை காரணமாக மன உளைச்சல் காரணமாக வெளியில் சென்றிருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், உடல்நிலை சரியில்லாமல் இருப்பதால் இந்த தகவலை உடனடியாக சொல்ல முடியவில்லை எனவும், அவர்களைக் காணவில்லை என்கின்ற மாதிரி எல்லாரும் தப்பாக தேடிவிட்டதாகவும் அந்த ஆடியோவில் மதனா கூறியுள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...