ரேஷன் அரிசி கடத்திய இருவருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

பொள்ளாச்சி அருகே கடந்த 2013ஆம் ஆண்டு ரேசன் அரிசி கடத்திய வழக்கில் கைதான கார்த்தி, நவாஸ் ஆகிய இருவருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி கோவை குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த வழக்கில் தொடர்புடைய விக்னேஷ் குமார் என்பவரை நீதிமன்றம் விடுதலை செய்தது.


கோவை: ரேஷன் அரிசி கடத்திய வழக்கில், இருவருக்கு தலா மூன்றாண்டு சிறை தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசார், 2013 மே 17ல், மீன்கரை ரோடு, காளியப்பகவுண்டன்புதுார் சோதனை சாவடியில், வாகன தணிக்கை செய்தனர். அப்போது, வேனை சோதனையிட்டதில், 19 டன் ரேஷன் அரிசி கேரளாவுக்குக் கடத்தப்படுவது தெரியவந்தது.

இதுதொடர்பாக, பொள்ளாச்சி திருநீலகண்டர் வீதியைச் சேர்ந்த கார்த்தி, 32; நேதாஜி ரோட்டை சேர்ந்த நவாஸ்(35),வஞ்சியாபுரத்தை சேர்ந்த விக்னேஷ்குமார், 39, மற்றும் ஆனந்தகுமார், தேன்மொழி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் மீது, கோவை குற்றவியல் நீதிமன்றம் 4ல் வழக்கு தொடரப்பட்டு, 9 ஆண்டுகளாக விசாரணை நடந்தது. விசாரணை முடிவில், குற்றம் சாட்டப்பட்டவர்களில் கார்த்தி, நவாஸ் ஆகியோருக்கு, மூன்றாண்டு சிறை, தலா 5ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி சரவணபாபு தீர்ப்பளித்தார்.

விக்னேஷ்குமார் விடுவிக்கப்பட்டார். ஆனந்தகுமார், தேன்மொழி ஆகியோர் விசாரணை காலத்தில் இறந்து விட்டனர். அரசு தரப்பில் வக்கீல் பிரசன்ன வெங்கடேஷ் ஆஜரானார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...