தாராபுரம் அருகே பெண்களுக்கு எதிரான வன்கொடுமை குறித்த சட்ட விழிப்புணர்வு முகாம்

தாராபுரம் அடுத்த பொன்னாபுரம் சமுதாயக் கூடத்தில் நடைபெற்ற பெண்ணுரிமை மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறை என்ற சட்ட விழிப்புணர்வு முகாமில் 150க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த பொன்னாபுரம் சமுதாயக்கூடத்தில் பெண் உரிமை மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை குறித்த சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

தேசிய சட்டப் பணிகள் ஆணை குழுவின் ஆணைப்படி தேசிய மகளிர் ஆணையம் மற்றும் திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவின் பேரில் இந்த சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.



இந்த முகாமிற்கு தாராபுரம் வட்ட சட்டப்பணிகள் குழுத் தலைவரும் சார்பு நீதிபதியுமான தர்ம பிரபு தலைமை ஏற்றார். தாராபுரம் குற்றவியல் நடுவர் பாபு மற்றும் பெண்கள் குழந்தைகள் நல அறக்கட்டளை தலைவர் ரேவதி, தன்னார்வலர் சிவகாமி வழக்கறிஞர் வாரனவாசை ஆகியோர் கலந்து கொண்டனர்.



இம்முகாமில் பொன்னாபுரம் பகுதியைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். இந்த முகாமில், பெண்கள் மற்றும் வயது முதிர்ந்த பெண்கள் போன்றோருக்கு ஏற்படும் பாலியல் வன்கொடுமையில் இருந்து எவ்வாறு விடுபடுவது குறித்து தெரிவிக்கப்பட்டது.

படித்த பெண்கள் சில சட்டங்களையாவது தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். பெண் குழந்தைகளை மனதளவிலும் உடல் நலவிலும் திடமானவர்களாக உருவாக்க வேண்டும்.

நீதிபதிகள் வட்ட சட்டப் பணிகள் குழு செயல்பாடு விதத்தையும் அதன் பயன்பாட்டையும் கூறினர். முகாமிற்கு வந்தவர்களை ஊராட்சி மன்ற தலைவர் ரேவதிக்குமார் வரவேற்று பேசினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...