ரூ.52 லட்சத்துக்கு ஏலம் போன ஆப்பிள் நிறுவனத்தின் பழைய ஐபோன்!

கரென் கிரீன் என்பவர் கடந்த 2007ஆம் ஆண்டில் ரூ.50,000-க்கு வாங்கிய முதல் தலைமுறை ஐபோன், சீல் பிரிக்கப்படாமல் 15 ஆண்டுகளுக்கு பிறகு ஏலத்திற்கு வந்த நிலையில், இந்த ஐபோன் சுமார் ரூ.52 லட்சத்துக்கு ஏலம் போயுள்ளது.


2007ஆம் ஆண்டு வாங்கப்பட்ட ஐபோன், சுமார் 52 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போயுள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்மார்ட் போன்கள் வரலாற்றில் புதிய புரட்சி என்று அறிமுகம் செய்யப்பட்ட ஆப்பிள் நிறுவனத்தின் முதல் ஐ-போனானது, கடந்த 2007ஆம் ஜூன் 29ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்த ஐபோனை வாங்குவதற்கு அமெரிக்கா போன்ற பல்வேறு நாடுகளில் ஏராளமான மக்கள், முன்பதிவு செய்துவிட்டு, ஆப்பிள் ஸ்டோர்களில் காத்திருந்து வாங்கி சென்றது அன்றைய வைரல் செய்தி என்றால் மிகையாகாது.

ஸ்மார்ட் போன்களில் புதிய புரட்சி என்ற அழைக்கப்பட்ட இந்த ஐபோன் தான், தொடு திரையை கொண்ட முதல் ஸ்மார்ட் போன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஐபோன், எளிமையான கீபோர்டை கொண்டுள்ளது என்ற பெருமையை தாங்கியே வலம் வந்தது. இந்த ஐபோனின் அப்போதைய விலை சுமார் 50 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.

இப்போ ஏன் இந்த பழைய கதை என்று தானே கேட்கிறீர்கள். விஷயம் இருக்கிறது. 2007ஆம் ஆண்டு ஆப்பிள் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வந்த முதல் தலைமுறை ஐபோன் தற்போது, 52 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போயுள்ளது.

ஏலம் எடுக்கப்பட்ட அந்த ஐபோனை, கரென் கிரீன் என்பவர் தனது நண்பருக்காக வாங்கியுள்ளார். ஆனால், அந்த நண்பர் வெரிஜோன் நிறுவனத்தில் பணியாற்றி வந்த நிலையில், ஐபோனில் வெரிஜோன் சேவை இல்லாததால், அந்த ஐபோனை பிரிக்கவே இல்லை என கூறப்படுகிறது.

15 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கப்பட்ட சீல் பிரிக்கப்படாத ஐபோன் சமீபத்தில் ஏலத்திற்கு வந்தது. சுமார் 2,500 டாலர் அதாவது இந்திய மதிப்பில் 2.06 லட்சம் ரூபாய் மதிப்பில் ஏலம் துவங்கப்பட்டது.

இந்நிலையில் இந்த ஐபோன் 63,356 டாலருக்கு விற்பனை செய்யப்பட்டது. இந்திய மதிப்பில் இந்த தொகையானது 53 லட்ச ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...