உடுமலை அருகே சிபிஎம் சார்பில் மத்திய பட்ஜெட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம்

உடுமலை அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உடுமலை ஒன்றிய கமிட்டி சார்பில் எரிசினம்பட்டியில் மத்திய அரசின் பட்ஜெட்டைடை கண்டித்துக் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.


திருப்பூர்: உடுமலை அருகே எரிசனம்பட்டியில் மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து சி.பி.எம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உடுமலை ஒன்றிய கமிட்டி சார்பில் எரிசினம்பட்டியில் மத்திய அரசின் பட்ஜெட்டைடை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இந்த ஆர்ப்பாட்டத்திற்கு உடுமலை ஒன்றிய கமிட்டி உறுப்பினர் சு.தமிழ்த்தென்றல் தலைமை தாங்கினார். எரிசினம்பட்டி கிளை செயலாளர் மணிக்குமார், கொடிங்கியம்வேலுச்சாமி முன்னிலை வகித்தனர்.



இதில் பட்ஜெட்டை கண்டித்தும், பட்ஜெட்டில் 100நாள் வேலைக்கு நிதியைக் குறைத்தது, உணவு மானியத்தை வெட்டியது, உர மானியத்தை வெட்டியது, மக்கள் நலதிட்டங்ளுக்கு நிதி ஒதுக்காததைக் கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...