கோடை காலத்தில் அமராவதி அணையை தூர்வார வேண்டும்..! - உடுமலை விவசாயிகள் கோரிக்கை

உடுமலை அருகேயுள்ள அமராவதி அணையை கோடை காலத்தை பயன்படுத்தி, தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமராவதி அணை பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசன விவசாயிகள் கோரிக்கை விடுத்துளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகேயுள்ள அமராவதி அணையை கோடை காலத்தில் தூர்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



உடுமலை அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உற்பத்தி ஆகி ஓடி வருகின்ற அமராவதி ஆற்றை தடுத்து 1955- 1958 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் அமராவதி அணை கட்டப்பட்டது. ஒன்பது கிலோமீட்டர் சுற்றளவும் 90 அடி உயரமும் கொண்ட இந்த அணையில் 4 டி.எம்.சி தண்ணீரை தேக்கி வைக்க முடியும்.



அமராவதி அணையை கொண்டு திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் மற்றும் பழைய புதிய ஆயக்கட்டு பாசனத்தில் 54 ஆயிரத்து 637 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெற்று வருகின்றன.

அமராவதி அணையில் இருந்து ஆற்றில் திறந்து விடப்படுகின்ற தண்ணீர் குதிரை ஆறு, பாலாறு போன்ற துணை நதிகளுடன் இணைந்து சுமார் 220 கிலோமீட்டர் தூரம் பயணித்து கரூர் மாவட்டம் திருமுக்கூடலுடன் காவிரி ஆற்றுடன் கலக்கிறது.



மேலும் நெடுந்தூரப் பயணத்தில் நூற்றுக்கணக்கான கிராமங்களில் குடிநீர் தேவையும் ஆயிரக்கணக்கான ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பட்டு வருகின்றன. வெள்ளப்பெருக்கு காலத்தில் மண் சிறுப்பாறைகள் மரக்கட்டைகள் போன்றவை தண்ணீருடன் அணை பகுதிக்கு அடித்து வரப்படுகின்றன.

இதனால் அணையின் நீர்தேக்க பரப்பளவு படிப்படியாக குறைந்து வருகிறது. அதனால் அதிகப்படியான தண்ணீரை தேய்க்க வைக்க முடியாததால் மழைக்காலங்களில் வெள்ள அபாயமும் கோடை காலத்தில் குடிநீருக்கான பாசனத்திற்கும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலையில் உள்ளது.

இதுகுறித்து அமராவதி அணை பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசன விவசாயிகள் கூறுகையில்,

அமராவதி அணை ஆனைமலை புலிகள் காப்பதற்கு உட்பட்ட வனப்பகுதியில் உள்ளதால் அனுமதி பெற வேண்டி உள்ளது. கோடை காலத்தில் வனவிலங்குகள் தண்ணீர் தேவையை நிறைவு செய்வதற்கு, அணைகளில் முகாமிட்டு வரும் வனவிலங்குகளுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் தூர்வார அனுமதி பெறுவதற்கான நடவடிக்கை சுமார் ஆறு மாத காலம் முன்பே தொடங்கினால் தான் கோடைகாலத்தில் முழுமையாக பயன்படுத்தி தூர்வார முடியும்.

இதனால் அதிகப்படியான தண்ணீரை தேக்கி வைத்து குடிநீர் மற்றும் பாசன வசதிக்கும், தேவைக்கும் பயன்படுத்த முடியும். எனவே வருகின்ற கோடைகாலத்தில் அணையை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், என்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...