ராணுவத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி - கோவையைச் சேர்ந்த 5 பேர் மீது வழக்கு

தேனி மாவட்டம், ஆண்டிபட்டியைச் சேர்ந்த நான்கு இளைஞர்களிடம் ராணுவத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.30 லட்சம் மோசடி செய்த கோவையைச் சேர்ந்த தம்பதி உட்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: ராணுவத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி நான்கு இளைஞர்களிடம் லட்சக்கணக்கில் மோசடி செய்த ஐந்து நபர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியைச் சேர்ந்தவர் அழகர் ராஜா(30). இவர் ராணுவத்தில் சேர்வதற்காக முயற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது அழகர் ராஜாவுக்குப் பக்கத்து வீட்டை சேர்ந்த தாமோதரன் என்பவர் மூலமாக கோவையைச் சேர்ந்த மனோஜ் பிரபாகர் என்பவர் அறிமுகமானார். அவர் உள்பட 5 பேர் தங்களுக்கு அரசு துறையில் அதிகாரிகளின் பழக்கம் உள்ளது.

அவர்களிடம் பேசி உங்களுக்கு ராணுவத்தில் உயர் பதவி வாங்கி தர முடியும். அதற்கு கொஞ்சம் பணம் செலவாகும் என ஆசை வார்த்தை கூறி உள்ளனர். இதனை உண்மை என நம்பிய அழகர் ராஜா அவர்களுக்குப் பணம் கொடுக்க முன் வந்தார். மேலும் தனது பகுதியைச் சேர்ந்த 3 வாலிபர்களுக்கும் வேலை பெற்றுத் தரவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து முதல் தவணையாக 4 பேரிடமும் கடந்த ஆண்டு ரூ.19.50 லட்சத்தை மனோஜ் குமார் உட்பட 5 பேர் வாங்கியதாக தெரிகிறது. மேலும் பல கட்டங்களாக ரூ.30.85 லட்சம் வரை பெற்றுள்ளனர். அதன் பின்னர் அவர்கள் ராணுவத்தில் வேலை வாங்கி கொடுக்கவில்லை, பணத்தையும் திருப்பி கொடுக்காமல் மோசடி செய்தனர்.

இதனால் பாதிக்கப்பட்டவர்கள் சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து ராணுவத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ. 30.85 லட்சம் மோசடி செய்ததாக கோவையை சேர்ந்த மது மோகன், அவரது மனைவி சுஜாதா, மனோஜ் பிரபாகர், ரவி, மற்றும் ராஜேஸ்வரி ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...