கோவை வேளாண் பல்கலையில் வேளாண் தொழில்‌ நிறுவுவதற்கான பயிற்சி வகுப்பு

கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில்‌ இரண்டு நாட்கள் நடைபெற்ற தொழில்‌ முனைவோருக்கு வேளாண் தொழில்‌ நிறுவுவதற்கான பயிற்சி வகுப்பு நிறைவு பெற்றது. இந்த பயிற்சியில் வேளாண் சார்ந்த துறைகளிலிருந்து 30 தொழில்‌முனைவோர்கள்‌ பங்கு பெற்றனர்‌.


கோவை: தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில்‌ இரண்டு நாட்கள் நடைபெற்ற தொழில்‌ முனைவோருக்கு வேளாண் தொழில்‌ நிறுவுவதற்கான பயிற்சி வகுப்பு நிறைவு பெற்றது.

வேளாண் விற்பனை மற்றும்‌ வணிகத்துறை, தமிழ்நாடு நீர் பாசன வேளாண்மை நவீனமயமாக்கல்‌ திட்டத்தின்‌ கீழ்‌ தொழில்‌ முனைவோருக்கு வேளாண் தொழில்‌ நிறுவுவதற்கான பயிற்சி தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்திலுள்ள தொழில்‌ நுட்ப வணிக காப்பகம்‌, வேளாண் வணிக மேம்பாட்டு இயக்ககத்தில்‌ இரண்டு நாட்கள்(27,28ஆம் தேதி) நடைபெற்றது.

முனைவர்‌ சோமசுந்தரம்‌, இயக்குநர்‌, வேளாண் வணிக மேம்பாட்டு இயக்ககம் பயிற்சியைத் துவக்கி வைத்து வேளாண்‌ வணிகத்திற்கான வாய்ப்புகள் குறித்து விரிவுரை வழங்கினார்‌. ஞானசம்பந்தம்‌, தலைமை செயல்‌ அதிகாரி, தொழில்‌ நுட்ப வணிக காப்பகம்‌ வரவேற்றார். முனைவர்‌ மலர்கொடி இணைப்‌ பேராசிரியர்‌, விவசாய மற்றும்‌ கிராமப்புற மேலாண்மை நன்றியுரை ஆற்றினார்‌.



வேளாண் மற்றும்‌ வேளாண் சார்ந்த துறைகளிலிருந்து 30 தொழில்‌ முனைவோர்கள்‌ இப்பயிற்சியில்‌ பங்கு பெற்றனர்‌. வணிகத்திட்டம்‌ தயாரித்தல்‌, வணிகத்திற்கான செலவு பகுப்பாய்வு, முதலீட்டுத்திட்டம்‌, தொழில்‌ நுட்ப வணிக காப்பகத்தின்‌ செயல்பாடுகள், வணிகம்‌ சார்ந்த சேவைகள்‌, உணவு பதப்படுத்துதல்‌ மற்றும்‌ மதிப்புக்கூட்டல்‌ போன்ற தலைப்புகளை மையமாகக்‌ கொண்டு இப்பயிற்சியானது நடைபெற்றது.

தொழில்‌ நுட்ப வணிக காப்பகத்தின்‌ தொழில்‌ முனைவோர்கள்‌ தங்களின்‌ தொழில்‌ முனைவோர்‌ பயணத்தைப் பயிற்சியாளர்களிடம்‌ பகிர்ந்து கொண்டனர்‌. இப்பயிற்சிக்குப் பின்‌ இறுதியில்‌ தோந்தெடுக்கப்பட்ட பயிற்சியாளர்களுக்கு ரூ.5 லட்சம்‌ வரையிலான கடனுதவியும்‌, ரூ.2லட்சம்‌ வரையிலான மானியமும்‌, இத்திட்டத்தின்‌ கீழ்‌ வழங்கப்படும்‌. மேலும்‌ இத்திட்டத்தின்‌ கீழ்‌, இவ்வகை பயிற்சியானது தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம்‌ தொழில்‌ நுட்ப உதவியுடன்‌ தமிழ்நாடு முழுவதும்‌ நடத்தப்பட உள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...