கோவை கோனியம்மன் கோயில் திருவிழா - பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!

கோவையில் நாளை நடைபெறவுள்ள கோனியம்மன் கோவில் தேர்த்திருவிழாவில் 25,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில் பாதுகாப்பு பணிக்காக கோவிலை சுற்றி 1000க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.


கோவை: கோவை கோனியம்மன் கோவில் திருவிழாவையொட்டி பாதுகாப்பு பணிக்காக கோவிலை சுற்றி 1000க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

கோவையில் அமைந்துள்ள பிரபலமான ஆன்மீக தளமாகும். கோனியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் தேர்த் திருவிழா பக்தர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றதாகும்.

கோனியம்மன் கோவில் தேர் திருவிழா நாளை நடைபெறவுள்ளது. இந்த திருவிழாவில் கோயம்புத்தூர் மட்டுமின்றி சுற்றுவட்டாரத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான ஆன்மீக பக்தர்கள் வந்து தரிசனம் செய்வார்கள்.

கிட்டத்தட்ட 25 ஆயிரம் முதல் 30,000 மேற்பட்ட பக்தர்கள் ஒரே நாளில் ஒரே இடத்துக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் பக்தர்களுக்கு பாதுகாப்பு தரும் பொருட்டு கோனியம்மன் கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதனையொட்டி, மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பெயரில் நான்கு துணை ஆணையர்கள், 11 உதவி ஆணையர்கள், 25 காவல் ஆய்வாளர்கள் உட்பட 1060 போலீசார் கோனியம்மன் திருக்கோயில் தேரோட்டத்தை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

அதுமட்டுமின்றி பக்தர்கள் கூட்டத்தில் கைவரிசை காட்டுவோரை பிடிப்பதற்காக போலீசார் மப்டியில் உலா வர இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கோனியம்மன் கோயிலின் நுழைவு வாசலில் மெட்டல் டிடெக்டர்களும் வைக்கப்பட்டு இருக்கின்றன. அசம்பாவிதங்கள் நடைபெறாத வண்ணம் பொதுமக்கள் மற்றும் பக்தர்களை பாதுகாக்க ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருக்கின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...