கோவையில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை - புகைப்பட கலைஞர் கைது

கோவை க.க.சாவடி அருகே கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வந்த புகைப்பட கலைஞரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்த 1,100 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனர்.



கோவை: கோவையில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த புகைப்பட கலைஞரை போலீசார் கைது செய்தனர்.

கோவை மாவட்டம் முழுவதும் கஞ்சா மற்றும் குட்கா விற்பனையைத் தடுக்க மாவட்ட எஸ்.பி. பத்ரிநாராயணன் உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கோவை க.க.சாவடி அருகே கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை நடப்பதாக க.க.சாவடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து உதவி ஆய்வாளர் உதயசந்திரன் தலைமையிலான போலீசார், க.க.சாவடி அருகே உள்ள நவக்கரை பகுதியில் ரோந்துச் சென்றனர்.

அப்போது அங்குச் சாலையில் சந்தேகத்திற்கிடமாக கல்லூரி மாணவர்களுடன் பேசிக்கொண்டிருந்த இளைஞரைப் பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.



விசாரணையில் அவர் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியைச் சேர்ந்த கனேசன் மகன் அருண்பிரசாத் (29) என்பதும், இவர் புகைப்பட கலைஞராக பணியாற்றிக் கொண்டு, வட மாநிலங்களிலிருந்து கஞ்சாவை ரயில் மூலம் வாங்கி வந்து, அதை கேரளாவிலும், எல்லையில் உள்ள கல்லூரிகளில் படித்து வரும் மாணவர்களுக்கு அதிக லாபத்தில் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்த 1.100 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...