கோவையில் கத்தியை காட்டி காவலாளியிடம் வழிப்பறி - இளைஞர் கைது

கோவை கணபதி பகுதியில் தனியார் நிறுவனத்தில் காவலாளியான பணிபுரிந்து வரும் சாமிநாதன் என்பவரை கத்தியை காட்டி மிரட்டி 500 பணத்தை பறித்துவிட்டு தப்பிச் சென்ற ஆதித்யன் என்பவரை சரவணம்பட்டி போலீசார் தேடி வருகின்றனர்.


கோவை: கோவை கணபதி பகுதியில் வசிப்பவர் சாமிநாதன் (வயது52). முதியவரான சாமிநாதன் கடந்த 13 வருடங்களாக அதே பகுதியில் செக்யூரிட்டியாக வேலை செய்து வருகின்றார். இந்த நிலையில் தனது பணியை முடித்துவிட்டு விநாயகர் கார்டன் பகுதி வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது, அங்கு வந்த ஒரு இளைஞர், அவரை வழிமறித்து பணம் கேட்டு மிரட்டியுள்ளார். முதியவர் தன்னிடம் பணம் இல்லை என்று தெரிவித்து இருக்கின்றார். ஆனால், அதனை பொருட்படுத்தாமல் தான் பதுக்கி வைத்திருந்த கத்தியை எடுத்த அந்த இளைஞர் முதியவரை மிரட்டி 500 ரூபாய் பணத்தை பறித்து விட்டு தப்பி ஓடியுள்ளார்.

இதுகுறித்து செக்யூரிட்டி சாமிநாதன் சரவணம்பட்டி போலீசில் புகார் தந்திருக்கின்றார். சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், ஆதித்யன் என்ற இளைஞர் இந்த வழிப்பறியில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து, கத்தியை காட்டி செக்யூரிட்டியிடம் பணம் பறித்த அந்த நபரை, போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...