கோவை வால்பாறை - பொள்ளாச்சி சாலையில் கடும் பனிமூட்டம் - வாகன ஓட்டிகள் அவதி!

கோவை மாவட்டம் வால்பாறை - பொள்ளாச்சி சாலையில் இன்று அதிகாலை முதல் கடுமையான பனிமூட்டம் நிலவியதால், எதிரில் வரும் வாகனங்கள் தெரியாததால், வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடியே வாகங்களை இயக்கி சென்றனர்.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை - பொள்ளாச்சி சாலையில் கடுமையான பனிமூட்டம் காரணமாக வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.



வால்பாறை - பொள்ளாச்சி சாலையில் இன்று அதிகாலை முதலே கடும் பனிமூட்டம் காணப்படுகிறது. வால்பாறை பகுதியில் சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில், இன்று காலை பனிமூட்டம் காணப்பட்டது.



இதில் பொள்ளாச்சி செல்லும் வழியில் கவர்கல், சக்தி, தலனார், வாட்டர் பால்ஷ், அட்டகட்டி போன்ற எஸ்டேட் பகுதிகளில் அதிக பனிமூட்டம் காணப்பட்டது. இதனால் வால்பாறையில் - பொள்ளாச்சி இடையே செல்லும் வாகனங்கள், எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால், வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே இயக்கி சென்றனர்.



பனிமூட்டம் காணப்படும் நிலையில், இருசக்கர, நான்கு சக்கர மற்றும் கனரக வாகனங்கள் அதிவேகமாக செல்லுவதால் விபத்து ஏற்படும் அபாயம் இருப்பதாக கூறப்படுகிறது.

இதனால் மலைப் பகுதிகளில் செல்லும் வாகனங்கள் வேககட்டுப்பாடுடன் செல்லவும், இருசக்கர வாகனங்கள் மெதுவாகவும் கவனமாகவும் செல்லும்படி வாகன ஓட்டிகளுக்கு போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...