கோவை சமூக ஆர்வலர் முகமது ரஃபி-க்கு 'சேவைத் திலகம் விருது' வழங்கிய பேரூர் ஆதினம்!

தமிழ்நாடு பல்சமய நல்லுறவு இயக்கத்தின் மாநில தலைவரான முகம்மது ரஃபி, மத நல்லிணக்க பணிகளில் ஈடுபட்டு வருவதை போற்றும் வகையில் சேவைத் திலகம் விருது வழங்கி பேரூர் ஆதினம் கவுரவித்துள்ளது.



கோவை: à®•ோவை சாய்பாபா காலனி பகுதியில் வசிப்பவர் முகமது ரஃபி. தமிழ்நாடு பல்சமய நல்லுறவு இயக்கத்தின் மாநில தலைவரான முகம்மது ரஃபி, மத நல்லிணக்க பணிகளில் ஈடுபட்டு வருகின்றார். குறிப்பாக மதநல்லிணக்கத்தை போற்றும் வகையில் பொங்கல், கிறிஸ்துமஸ், தீபாவளி என அனைத்து பண்டிகைகளையும், சமய வேறிபாடுகளின்றி, அனைத்து மத சான்றோர்களுடன் கொண்டாடுவார்.



இதுமட்டுமின்றி நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். அதேபோன்று தமிழகம் முழுவதும் தொடர்ந்து பல்வேறு மத நல்லிணக்க நிகழ்ச்சிகள், கருத்தரங்குகளை நடத்தி வருகிறார்.

போதை பொருள் தீமைகள் குறித்து குறும்படங்கள் தயாரித்து, கல்லூரி மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். இவர் கடந்த கொரோனா காலத்தில், பசி பட்டினியுடன் தவித்த வடமாநில தொழிலாளர்கள் மற்றும் ஏழை எளியோருக்கு உணவளித்து உதவினார். 

ஒரு கட்டத்தில் பொருளாதார நெருக்கடியில் இருந்த முகமது ரஃபி, தன் மனைவி மற்றும் அண்ணன் மகள் திருமணத்துக்காக வைத்திருந்த நகைகள் மற்றும் பணத்தை செலவிட்டு உணவளித்து வந்தார்.



இந்த சம்பவம் தமிழ்நாடு அளவில் கவனத்தை ஈர்த்திருந்தது. இவ்வாறு, மதபாகுபாடின்றி அனைத்து நலப்பணிகளையும் செய்து வருகின்ற இவரின் சேவையை பாராட்டி, கோவை பேரூர் ஆதினம் சார்பாக பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் முகமது ரஃபி-க்கு சேவை திலகம் விருது வழங்கப்பட்டுள்ளது.

பேரூர் ஆதினம் தமிழ் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில், பேரூர் ஆதினம் தவத்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார் முகமது ரஃபி-க்கு  சேவை திலகம் விருதை வழங்கி கவுரவித்தார். 

இஸ்லாமியரான முகமது ரஃபி-க்கு , இந்து வழிபாடு நடக்கின்ற பேரூர் மடத்தில் மடாதிபதியான சாந்தலிங்க மருதாச்சல அடிகளார் வழங்கிய விருது மத நல்லிணக்க ஒற்றுமைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...