கோவையில் 10,11,12 மாணவர்களுக்கு செய்முறை தேர்வு இன்று தொடக்கம்!

கோவை மாவட்டத்தில் 254 மையங்களில் 10, 11, 12 ஆகிய மாணவர்களுக்கான செய்முறை தேர்வு தொடங்கியுள்ளது. பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் 17,356 மாணவர்களும், கோவை கல்வி மாவட்டத்தில் 69,111 மாணவர்களும் தேர்வெழுத உள்ளதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பூபதி தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை மாவட்டத்தில் 10, 11, 12 ஆகிய மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் இன்று தொடங்கியுள்ளன.

தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மார்ச் 13ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 3ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதேபோல் பிளஸ் 1 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 14ம் தேதி தொடங்கி ஏப்ரல் 5ம் தேதி வரை நடைபெற உள்ளது. மேலும் 10 வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மார்ச் 14ம் தேதி முதல் ஏப்ரல் 5ம் தேதி வரை நடக்கிறது.

இந்நிலையில், எஸ்.எஸ்.எல்.சி., 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் மார்ச் 1ஆம் தேதியான இன்று துவங்கியுள்ளது. இன்று தொடங்கியுள்ள இந்த செய்முறை தேர்வுகள் வரும் மார்ச் 9ஆம் தேதி வரை நடைபெற உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பேசிய முதன்மை கல்வி அலுவலர் பூபதி, கோவை மாவட்டம் முழுவதும் 254 மையங்களில் 10, 11, 12 ஆகிய மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் நடைபெறுகிறது. பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் 17,356 மாணவர்களும், கோவை கல்வி மாவட்டத்தில் 69,111 மாணவர்களும் தேர்வெழுத உள்ளதாக தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...